கடலூர் முல்லை கோ-ஆப்டெக்ஸில் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்.. 2 வாங்கினால் 1 இலவசம்! குவியும் மக்கள்
கடலூர்: தமிழகத்தின் பாரம்பரிய கலைநயத்திற்கும் கைத்தறி நெசவாளர்களின் கடின உழைப்பிற்கும் ஒரு பெரும் அடையாளமாக விளங்குவது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஆகும்.. அரசு நிறுவனமான இது, தரமான கைத்தறி ஆடைகளை நியாயமான விலையில் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதுடன், லட்சக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் உன்னதப் பணியைச் செய்து வருகிறது.. அந்த வகையில், கடலூர் மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான முல்லை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தற்போது ஒரு சூப்பரான சிறப்பு விற்பனைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.. அது என்ன தெரியுமா?
கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி கடலூர் முல்லை கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனை ஆரம்பமானது.. இந்த விற்பனையானது, கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது..

கடலூர் முல்லை கோ-ஆப்டெக்ஸ்
வரும் மார்ச் மாதம் 28ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விற்பனையில், "இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்" என்ற அதிரடிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது..
இது குறித்து மண்டல மேலாளர் மாணிக்கம் விரிவான தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் தங்களின் தனித்துவமான கைவண்ணத்தில் உருவாக்கிய மென்மையான பட்டுச் சேலைகள், உயர்தரப் பருத்திச் சேலைகள், உறுதியான போர்வைகள் மற்றும் கண்கவர் வண்ணங்களில் அமைந்த படுக்கை விரிப்புகள் எனப் பல்லாயிரக்கணக்கான ரகங்கள் இங்கே விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன..
இலவச சேலைகள்
மேலும், அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், நேர்த்தியான பருத்திச் சட்டைகள், துண்டுகள் மற்றும் வீட்டின் அழகைக் கூட்டும் திரைச்சீலைகள் என அனைத்துமே இந்தச் சலுகையின் கீழ் கிடைக்கின்றன..
2 பொருட்களின் விலையை செலுத்தினால், கூடுதல் ஒரு பொருளை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்பதால், ஒரு பொருளின் விலையிலேயே நுகர்வோருக்கு பெரும் லாபம் கிடைக்கிறது.. 2 விலையில் 3 பொருட்கள் வழங்கப்படுவதால், கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தங்களுக்குப் பிடித்தமான ஆடை ரகங்களைத் தேர்வு செய்து செய்கிறார்கள்.
இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்
இவை தவிர, சாமானிய மக்களும் உயர்ந்த ரகத் துணிகளை வாங்கும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் ஒரு சிறப்பான மாதாந்திரச் சிறுசேமிப்பு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது..
இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப மாதம் 300 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை 11 மாதத் தவணைகளை செலுத்தலாம்.. இதில் உள்ள ஒரு கூடுதல் சிறப்பு என்னவென்றால், 12-வது மாதத் தவணையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தும் என்பதாகும்.. இந்தச் சேமிப்பு தொகையை கொண்டு முதிர்வு காலத்தில் பட்டு மற்றும் பருத்தி ரகத் துணிகளை வாடிக்கையாளர்கள் தடையின்றி வாங்கிக் கொள்ளலாம்..
அதுமட்டுமல்ல, தரமான பருத்தி ஆடைகளை அணிவது உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது என்பதால், இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது..!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications