ஷாக்.. போலீஸ் நிலையத்திலேயே! தூக்க மாத்திரைகளை தின்று காவல் உதவி பெண் ஆய்வாளர் தற்கொலை முயற்சி
கடலூர்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையில் உதவி பெண் காவல் ஆய்வாளர் அதிகளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் தற்கொலை முயற்சியின் பின்னணியில் உள்ள திடுக்கிடும் காரணம் வெளியாகி உள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுகன்யா. காவல் துறையில் அடிக்கடி அதிகாரிகள், போலீசார் இடமாற்றம் செய்வது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் தான் சுகன்யா பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

நெல்லிக்குப்பம் உதவி காவல் ஆய்வாளராக உள்ள சுகன்யா, விழுப்புரம் காவலர் பயிற்சி பள்ளிக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பணி இடமாற்றம் செய்தது பற்றியும், அதற்கான காரணம் குறித்தும் சுகன்யா உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், சுகன்யாவின் பணிஇடமாறுதலுக்கான காரணத்தை அவரிடம் கூறவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் சுகன்யா மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர் திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலை செய்யும் முடிவில் அவர் அதிகளவு தூக்க மாத்திரைகளை தின்றுள்ளார்.

இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புதுச்சேரி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உதவி காவல் ஆய்வாளர் சுகன்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கடலூர் மாவட்ட போலீஸ் வட்டராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications