"பச்சை கிளி" தந்த கிலி.. கடலூரில் பாமகவுக்கு "நேரமே சரியில்லை"? ஆமா, வீட்டில் கிளி வளர்க்கலாமா? ஓஹோ
கடலூர்: வீடுகளில் கிளிகள் வளர்க்கலாமா? கிளி மட்டுமல்ல மற்ற பறவைகளையும் வளர்க்கலாமா? வனத்துறை சொல்வது என்ன?
கடலூர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் பிரபல டைரக்டர் தங்கர் பச்சான்.. இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நொடியில் இருந்தே, பரபரப்புகளும், சலசலப்புகளும் வெடித்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில், கிளி ஜோசியம் பஞ்சாயத்து தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

தொகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த தங்கர் பச்சான், திடீரென கிளி ஜோதிடம் பார்த்தார். "தங்கர்பச்சானின் வெற்றி கடலூருக்கு உறுதி" என்று கிளி ஜோசியர் செல்வராஜ் சொல்லிவிட்டாராம்.. இதனால் பூரிப்படைந்த தங்கர்பச்சான், அந்த கிளிக்கு தன்னுடைய கையால் நெல் கொடுக்க ஆசைப்பட்டார்.. ஆனால், கைவசம் நெல் மணிகள் இல்லை. அதனால், வாழைப்பழம் தந்தார்.
தங்கர்பச்சான்: அதற்குள் தங்கர்பச்சான் கிளி ஜோதிடம் பார்த்த வீடியோ இணையத்தில் பரவியது.. கிளியை கூண்டில் அடைத்து வைப்பது சட்ட விரோதம் என்று சொல்லி வனத்துறை கிளி ஜோசியரை கைது செய்துவிட்டது. இவருடன் சேர்த்து, வேறொரு இடத்தில் கிளி ஜோதிடர் பார்த்த இன்னொரு ஜோசியரும் சிக்கினார். 2 பேரிடமுமிருந்து 4 கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டன..
கிளியை வளர்ப்பது குற்றம் என்று வனத்துறை தரப்பில் சொன்னாலும், தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்பதால்தான், கிளி ஜோதிடர் கைது செய்யப்பட்டதாக பாமக தலைவர் அன்புமணி கொந்தளித்துள்ளார்.
கிளிகள்: ஆனால், சில மாதங்களுக்கு முன்பே, பிரபல நடிகர் ஒருவர் வீட்டில் கிளிகளை வளர்ப்பதாக புகார் வந்தது... அவருக்கும் இப்படித்தான் நோட்டீஸ் அனுப்பி, வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்... அவரிடமிருந்தும் கிளிகள் மீட்கப்பட்டன.. அந்த நடிகருக்கும் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஒருபக்கம் கிளி ஜோதிடம் பார்க்கும் பழக்கம் இன்னமும் இருந்து வருகிறது.. மறுபக்கம் கூண்டில் கிளிகளை அடைப்பதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களுக்கு மிகுந்த குழப்பத்தை தந்துவிட்டது.. கிளிகள் வளர்ப்பது குற்றமா? இல்லையா? என பொதுமக்களே குழம்பியிருப்பதாக தெரிகிறது.
வனத்துறை கண்டிப்பு: ஆனால், கிளி மட்டுமல்ல, எந்தவகையான பறவைகளை வீடுகளில் வளர்ப்பதும், விற்பனை செய்வதும் குற்றம் என்று வனத் துறையினர் கண்டிப்புடன் சொல்கிறார்கள்.. இதுகுறித்து, வனத் துறை அதிகாரி ஒருவர் இதை பற்றி சொன்னதாவது:
"கடந்த 1990 - 91ல் ஏற்பட்ட சர்வதேச உடன்பாடு அடிப்படையில், கிளிகளை வளர்ப்பதற்கு மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தடை குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.. அதனால்தான், இன்னமும் நிறைய பேர் கிளிகளை வளர்த்து வருகிறார்கள்.. ஆன்லைன் மூலமும் வருடத்துக்கு 700 கிளிகள் விற்பனையாவதாக தகவல்கள் கூறுகின்றன. ஒரு கிளி, 300 முதல், 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
சிறை தண்டனை: அதனால், வீடுகளில் கூண்டுகளில் கிளிகளை வளர்ப்போர், விதிமுறைகள் தெரியாமல், வீடுகளில் யாராவது கிளிகளை வளர்த்தால், தாங்களாக முன்வந்து அவற்றை விடுவிக்க வேண்டும். அதையும் மீறி வீடுகளில் வளர்த்தால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, சம்பந்தப்பட்ட நபருக்கு 25,000 ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்" என்றார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications