கடலூர் கலங்குது.. ஆடு மேய்க்க போன கணவன்.. ராஜேஸ்வரியின் அக்கப்போரு.. சாக்கடையில் அது வேற மிதக்குதே
கடலூர்: 21 வயது ராஜேஸ்வரி, வடலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பதறியடித்து கொண்டு வந்து புகார் தந்தார்.. இதையடுத்து நடந்த விசாரணையில், பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.. என்ன நடந்தது கடலூரில்?
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சிறுநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிராஜ்.. 24 வயதாகிறது.. இவர் செம்மறி ஆடுகள் மேய்க்கும் கூலி தொழிலாளி ஆவார்.. இவரது மனைவி பெயர் ராஜேஸ்வரி.. 21 வயதாகிறது.

ராதிகா: இவர்களுக்கு 3 வயதில் ராதிகா என்ற பெண் குழந்தையும், லாவண்யா என்ற 5 மாத கைக்குழந்தையும் உள்ளது.. ஆடுகளை கிடைகள் போட வேண்டும் என்பதால், மணிராஜ் வேறு வேறு ஊர்களில் தங்கியிருந்து ஆடுகளை மேய்த்து வருகிறார். இதனால், ராஜேஸ்வரி தன்னுடைய 2 பெண் குழந்தைகளுடன் கடலூர் மாவட்டம் வடலூரிலேயே வசித்து வந்தார்.
இந்நிலையில், வடலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம், ராஜேஸ்வரி பதறியடித்து கொண்டு ஓடிவந்தார்.. தன்னுடைய 5 மாத குழந்தையை, கணவர் மணிராஜ் 2 பேருடன் வந்து தூக்கிச்சென்றுவிட்டதாகவும், அந்த குழந்தையை மீட்டு தரவேண்டும் என்றும் புகார் தந்தார்.. இதையடுத்து போலீசாரும், மணிராஜ் எங்கே இருக்கிறார்கள் என்று தேடினார்கள்.
என்ன காரணம்: அப்போதுதான், அவர் தொழுதூர் பகுதியிலேயே தங்கியிருந்து ஆடுகளை மேய்த்து வருவது தெரியவந்தது.. அதாவது, குழந்தை சம்பவத்துக்கும், மணிராஜுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது உறுதியானது.. எனவே, புகார் கொடுத்த ராஜேஸ்வரி மீதே போலீசாருக்கு சந்தேகம் திரும்பியது..
இதையடுத்து, ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினார்கள்.. அதற்கு ராஜேஸ்வரி, தன்னுடைய குழந்தைக்கு காதில் திடீரென சீழ் வடிந்ததால், மருந்து போட்டதாகவும், ஆனால், கொஞ்ச நேரத்திலேயே குழந்தைக்கு மூச்சுத்திணறி இறந்துவிட்டதாகவும், சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் வடலூர்-கடலூர் சாலையில் உள்ள அய்யனேரி அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் குழந்தையை வீசியதாகவும் கூறினார்.
கால்வாய்: இதைகேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த கழிவுநீர் கால்வாய் பகுதிக்கு ஓடினார்கள்.. மிதந்து கிடந்த குழந்தையின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
ஆனால், போலீசாருக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், குழந்தைக்கு காதில் சீழ் வடியவும் இல்லை, ராஜஸ்வரி காதில் மருந்து ஊற்றவும் இல்லை என்பது உறுதியானது..
கள்ளக்காதல்: இதையடுத்து, மறுபடியும் ராஜேஸ்வரியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான், ராஜேஸ்வரியின் கள்ளக்காதல் விவகாரமும் வெளியே வந்தது.. தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 5 மாத குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டதாக வாக்குமூலம் தந்தார்.. தன் குடும்பத்துக்காக ஊர் ஊராக சென்று ஆடுகளை மேய்த்து வரும் கணவர் மணிராஜ், ராஜேஸ்வரியின் செயலை கண்டு அதிர்ந்து போய் கிடக்கிறாராம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications