கடலூரில் "முத்தம்" தந்த ஹெச்.எம்... ஜட்டியுடன் உட்கார வைத்த மக்கள்.. தலைமை ஆசிரியரே இப்படி செய்யலாமா
கடலூர்: விருதாச்சலம் பள்ளியில் நடந்த சம்பவம், பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை தந்து வருகிறது. இது தொடர்பான விசாரணையை இன்றைய தினமும் போலீசார் கையில் எடுத்து வருவதால், கடலூர் மாவட்டமே கதிகலங்கி கிடக்கிறது.
சமீப காலமாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்தபடியே வருகின்றன.. தமிழக அரசும் பெண் பிள்ளைகளை காப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. தமிழக போலீசாரும் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர்.. அப்படி இருந்தும் பாலியல் வழக்குகள் பெருகி வருகின்றன..

ஆசிரியைகள்: அதிலும், கல்வியை போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் போக்சோவில் கைதாவது அதிர்ச்சியை தந்துவருகிறது. சிலசமயம், ஆசிரியைகளே போக்சோவில் கைதாகி விடுவது, அதைவிட வெட்கக்கேடானது..
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து போக்சோவில் அடைத்தாலும், இப்படியானகுற்ற செயல்களின் எண்ணிக்கைகள் குறையவே இல்லை.. அப்படியானால் போக்சோவைவிட தீவிரமான, கடுமையான சட்டங்களே அதிகம் தேவை என்பதையே அழுத்தமாக நாம் வலியுறுத்த வேண்டி உள்ளது...!
கடலூர்: இதோ கடலூர் மாவட்டத்தில் நேற்றுகூட ஒரு கன்றாவி நடந்துள்ளது.. விருத்தாசலம் அருகே எருமனூர் சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் எடில் பெர்ட் பெலிக்ஸ்.. 45 வயதாகிறது.. இவர் கடலூரை சேர்ந்தவர்..
இவர் நேற்று தன்னுடைய செல்போனில் மாணவி ஒருவரின் போட்டோவுக்கு முத்தம் தருவதுபோல ஸ்டேட்டஸ் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த மாணவி, கடந்த வருடம் இவரிடம் படித்தவராம்.. அவருக்கு முத்தம் கொடுப்பது போல் போட்டோ ஒன்றை தனது செல்போனில் வைத்ததுமே, அந்த போட்டோ திடீரென சோஷியல் மீடியாவில் பரவிட்டது.
மாணவர்கள்: இதை பார்த்த அந்த மாணவியின் உறவினர்களும், மாணவியின் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும் அதிர்ச்சியும் கொதிப்பும் அடைந்தனர்.. ஆத்திரமடைந்து நேற்று மாலையே ஸ்கூலுக்கு சென்றுள்ளனர். அங்கு தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கி, அவரது ஆடைகளை கிழித்தெறிந்தனர்.. அவரது ரூமிலிருந்து அவரை ஜட்டியுடன் வெளியே இழுத்து வந்தனர்.. பள்ளி வளாகத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தூரம்வரை அவரை தாக்கிக்கொண்ட சென்றார்கள்.

அதற்குள் தகவலறிந்து விருத்தாசலம் போலீசார் வந்துவிட்டனர்.. தலைமை ஆசிரியரை மீட்டு பொதுமக்களிடமிருந்து மீட்டு, பள்ளி வளாகத்திற்குள் கொண்டு சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோதே, உறவினர்களும், இளைஞர்களும் ஆவேசம் குறையாமல், விருத்தாசலம் - எருமனூர் சாலையில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமையாசிரியரை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
தாசில்தார்: இதற்கு பிறகு, தாசில்தார் உதயகுமார், விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா ஆகியோர், பொதுமக்களிடம் சமாதானம் பேசி, இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தி முடிவெடுப்பதாக உறுதி தந்தார்கள்.. அதற்கு பிறகே, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கு பிறகு தலைமை ஆசிரியர் எடில் பெர்ட் பெலிக்ஸை, போலீசார் விருத்தாசலம் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய தினம் தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இல்லாவிட்டால், மாணவியின் பெற்றோர், மற்றும் பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கவும் தயாராகிவருகிறார்களாம்.
திடீர் ட்விஸ்ட்: முன்னதாக, ஊர் மக்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தி கொண்டிருந்தபோது, சம்பந்தப்பட்ட மாணவி திடீரென சம்பவ இடத்திற்கு வந்தார்.. அங்கிருந்தவர்களை பார்த்து, "நானும் தலைமை ஆசிரியரும் காதலிக்கிறோம்.. நீங்கள் ஏன் சாலை மறியல் செய்கிறீர்கள்? என்னை அவருக்கு பிடித்திருந்தது காதலித்தேன்.. என் அனுமதியில்லாமல் அவரை கைது செய்யக்கூடாது" என போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பெருத்த குழப்பத்துக்கு ஆளாகிவிட்டார்கள். மாணவி இப்படி தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக பேசினாலும், இன்னும் 18 வயது நிரம்பாதவர்.. அதனால், சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி தலைமை ஆசிரியர் அத்துமீறிய காரணத்திற்காக, அவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications