ஆங்கில வளர்ச்சியே திமுகவின் நோக்கம்.. தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்தது?.. அண்ணாமலை கேள்வி!
கடலூர்: ஆங்கிலத்தை வளர்ப்பதே திமுகவின் நோக்கம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான, அலுவல் மொழி குழு குடியரசுத் தலைவரிடம் அளித்த பரிந்துரைகள் குறித்த தகவல்கள் வெளியில் கசிந்தது.
அதில் இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடி-க்கள் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இருப்பதாக தகவல் வெளியாகியது.

பாஜக ஆர்ப்பாட்டம்
இதனை கண்டித்து திமுகவின் இளைஞர் மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் திமுக அரசு தாய்மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாகக் கூறி பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

பெரியாரை கையில் எடுத்த அண்ணாமலை
கடலூரில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 1965ல் இந்தி எதிர்ப்பு பற்றி பெரியார் பேசிய வார்த்தைகள் எடுத்து அண்ணாமலை பேசினார். அதில், இந்தி எதிர்ப்பு பற்றி பெரியார் பேசியதை திமுகவினர் தெரிந்துகொள்ள வேண்டும். 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பின், இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்காக அல்ல. ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக தான் என்று பெரியார் தெரிவித்துள்ளார்.

தெய்வீக மொழி
தமிழ் என்பது தெய்வீக மொழி. நமது மொழியில் மட்டுமே இறையாண்மை, கடவுள், சனாதன தர்மம் ஆகியவை இருக்கிறது. தமிழ் மொழியை ஊக்குவித்தால், இறை நம்பிக்கையை ஊக்குவிக்கிறோம் என்று கருதுகிறார்கள். திமுகவினர் தமிழை இறக்கிபிடித்துவிட்டு ஆங்கிலத்தை ஆதரித்தார்கள்.

திமுக என்ன செய்தது?
1965ல் திமுக இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய போது, இந்தி எப்போதும் வேண்டாம், ஆங்கிலம் எப்போதும் வேண்டும் என்ற கோஷம் எழுப்பினார்கள். இதுதான் திமுகவின் திட்டம். தாய் மொழியில் 10ம் வகுப்பு மாணவர்கள் 48 ஆயிரம் பேர் தோல்வியடைந்துள்ளனர். இந்தியை யாரும் திணிக்கவில்லை. ஆங்கிலத்தை வளர்ப்பதே திமுகவின் நோக்கம். தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காக திமுக எதுவும் செய்யவில்லை என்று விமர்சித்தார்.
-
பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications