சீட்டு கொடுக்காட்டி அவ்ளோதான்.. கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக பிரமுகர்!
கடலூர்: அரசு கலைக் கல்லூரி முதல்வரை தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரி முதல்வர் தென்னரசு. இவர் நேற்று காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் விசிக விவசாய சங்க பிரமுகர் பசுமைவளவன் என்பவர் தொலைபேசியில் தன்னை தொடர்புகொண்டு அவதூறாக பேசினார்.
மேலும் பணி செய்ய விடாமல் மன உளைச்சலை ஏற்படுத்தி கொலைமிரட்டல் விடுத்ததாக ஆடியோ பதிவுடன் காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணனிடம் புகார் மனு அளித்தார்.

விசாரணை
அதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் தற்போது மேற்கண்ட கல்லூரியில் 2021-22 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சிதம்பரம் நாடாளுமன்ற விசிக தொகுதி செயலாளர் வ.க.செல்லப்பன் என்பவர் மாணவர் ஒருவருக்கு சேர்க்கைக்காக சிபாரிசு கடிதம் வழங்கியதாக தெரிகிறது.

கல்லூரி முதல்வர்
கடிதத்தை கல்லூரி முதல்வர் தென்னரசு நிராகரித்துள்ளார். இது தொடர்பாக காட்டுமன்னார்கோவில் விசிக நிர்வாகி பசுமைவளவன் கல்லூரி முதல்வரை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கல்லூரி முதல்வர்
அப்போது பசுமைவளவன் கல்லூரி முதல்வர் தென்னரசை அவதூறாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தது உறுதியானது. சம்பந்தபட்ட ஆடியோ பதிவின் அடிப்படையில் காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் மீனா, உதவி காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 294 பி, 353 மற்றும் 506-I பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கல்லூரி முதல்வர்
கல்லூரி முதல்வரை விசிக பிரமுகர் மிரட்டும் ஆடியோ சமூக வளைதலங்களில் பரவி வருவதால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் இரவில் வாகனத்தில் வெளியே வந்ததுடன் முகக் கவசம் அணியாமல் வந்திருந்தார்.

செல்வாக்கு
இதையடுத்து அவரை அழைத்து எச்சரிக்கை விடுத்த காவல் துறையினரை நான் யார் தெரியுமா, எங்களுக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர் என கூறி மிரட்டியதாக அவரை போலீஸார் கைது செய்தனர். இது போல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய அரசியல் கட்சி நிர்வாகி ஒருவரை போலீஸார் கைது செய்த போதும் தனது அரசியல் செல்வாக்கை கூறி மிரட்டியது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications