8 மாத கர்ப்பிணி.. நிர்வாணமாக்கி "சைக்கோ கணவன்" செய்த காரியம்.. விருத்தாசலமே ஆடிப் போச்சு
விருத்தாசலம்: சாப்பாடு, தண்ணீர் ஏதும் கொடுக்காமல் கர்ப்பிணி மனைவியை நிர்வாணமாக்கி கை,கால்களை கட்டி வைத்து அந்தரங்க உறுப்பை சிதைத்து கணவர் கொடுமை செய்த சம்பவம் விருதாச்சலம் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ளது பவழங்குடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மணிராஜ் (30). இவரது மனைவி சர்மிளா பானு (24). இருவரும் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சர்மிளா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் சர்மிளா மீது மணிராஜுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் அவரை அவ்வப்போது கொடுமைப்படுத்தி தாக்கி வந்துள்ளார்.

கோபம்
இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூட மணிராஜிடம் கோபித்துக் கொண்டு தனது தாய்வீட்டுக்கு சர்மிளா சென்றுவிட்டார். இதையடுத்து தான் செய்தது தவறு என கூறி கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் மணி ராஜ் சர்மிளாவை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால் மணிராஜ் திருந்தவில்லையாம்.

சைக்கோ
சர்மிளா பானுவுக்கு சாப்பாடு , தண்ணீர் எதுவும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்தது தெரியவந்தது. மேலும் சிகரெட்டால் உடலில் பல்வேறு இடங்களில் சூடு வைத்து சித்ரவதையும் செய்துள்ளார். கிட்டதட்ட சைக்கோ போல் மணிராஜ் நடந்துள்ளார்.

நிர்வாணமாக்கிய கொடூரம்
மேலும் சர்மிளாவை நிர்வாணமாக்கி அவரது அந்தரங்க உறுப்பில் கூட சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கு ரத்த போக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின்பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிர்ச்சி
மேலும் தலைமறைவாக உள்ள மணிராஜையும் போலீஸார் தேடி வருகிறார்கள். லாரி டிரைவர் என்பதால் லாரியை எடுத்து கொண்டு அவர் அண்டைய மாநிலங்களில் தங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடி வருகிறார்கள். இரு குழந்தைகள் இருந்தும் 3ஆவதாக 8 மாத குழந்தையை வயிற்றில் சுமந்து வரும் காதல் மனைவியை சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications