கள்ளக்குறிச்சி மாணவி.. சிசிடிவி காட்சிகள் உண்மையா? வெளியானது எப்படி?.. துப்பு துலக்கும் சிபிசிஐடி!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சில இணையத்தில் வெளியானது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சிசிடிவி காட்சிகளின் நம்பகத்தன்மையும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
கள்ளக்குறிச்சி வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது. கள்ளக்குறிச்சி கலவரம் மற்றும் மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இன்னொரு பக்கம் கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதோடு மாநில குழந்தைகள் நல ஆணையம் சார்பாகவும் மைனர் என்பதால் விசாரணை நடைபெற்று வருகிறது.

எஸ்ஐடி
இதில் கலவரம் தொடர்பாக எஸ்ஐடி நடத்தும் விசாரணை கடைசி கட்டத்தை எட்டி உள்ளது. நாளை இதில் இறுதிக்கட்ட விசாரணை நடக்க உள்ளது. நேற்றும் நேற்று முதல் நாளும் ட்ரோன் மூலம் சோதனை செய்யப்பட்டது. அங்கு ஏற்பட்ட சேதம் குறித்து போட்டோ எடுத்து ஆய்வுகள் செய்யப்பட்டது. அதேபோல் லேசர் 3டி ஸ்கேன் மூலம் நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இன்னொரு பக்கம் மாணவியின் மரணம் பற்றி சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது.

வீடியோ
இந்த நிலையில்தான் மாணவி வீடியோ என்று சில சிசிடிவி வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. அதன்படி ஒரு வீடியோவில் அந்த பள்ளி சீருடை அணிந்த மாணவி வகுப்பு அறைக்குள் சென்று, பெஞ்சில் சோகமாக படுத்து தூங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இது போக இன்னொரு வீடியோவில் மாணவி இரவு நேர ஸ்டடி முடித்துவிட்டு 9.30 மணிக்கு 3வது மாடிக்கு செல்லும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
Recommended Video

மாணவிதானா?
ஆனால் இது அந்த மாணவி தானா என்று போலீஸ் உறுதி செய்யவில்லை. மாணவியின் பெற்றோரும் உறுதி செய்யவில்லை. சிபிசிஐடி தரப்பும் இந்த சிசிடிவி காட்சிகளின் நம்பகத்தன்மையை இன்னும் உறுதி செய்யவில்லை. இந்த நிலையில்தான் இந்த சிசிடிவி காட்சிகள் குறித்து சிபிசிஐடி விசாரணை செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக பள்ளியின் சிசிடிவி காட்சிகளை பள்ளி நிர்வாகம் சிபிசிஐடி தரப்பிடம் கொடுத்துவிட்டதாக தகவல் வெளியானது.

சிபிசிஐடி
அதாவது மாணவி தொடர்பான சிசிடிவி வீடியோக்கள், அவரின் உடலை காலையில் வாட்ச் மேன் கண்டுபிடித்தது தொடர்பான வீடியோக்களை சிபிசிஐடி தரப்பிடம் பள்ளி நிர்வாகம் கொடுத்ததாக செய்திகள் வந்தன. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியானது எப்படி? இது உண்மையில் மாணவியின் சிசிடிவி காட்சிகளா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி தரப்பும் தற்போது விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications