கள்ளக்குறிச்சி பள்ளி பிரின்சிபல் அறையில் "ஆணுறை"? எப்படி வந்தது? தனியார் பள்ளி சங்கம் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் முதல்வர் அறையில் ஆணுறை கண்டுபிடிக்கப்பட்டதாக எழுந்த புகார்கள் குறித்து தனியார் பள்ளி சங்க பொது செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    Kallakurichi School அலுவலகத்தில் Condoms..வெளியான அதிர்ச்சி வீடியோ | *TamilNadu

    செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி பலியான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    அங்கு படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 12ம் தேதி பலியானார். அங்கு ஏற்கனவே மாணவிகள் பலர் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் புகார் வைக்கப்பட்டள்ளது. இந்த நிலையில் அந்த மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்திலும் பெற்றோர் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

    செய்தியாளர் சந்திப்பு

    செய்தியாளர் சந்திப்பு

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் முதல்வர் அறையில் ஆணுறை கண்டுபிடிக்கப்பட்டதாக எழுந்த புகார்கள் குறித்து தனியார் பள்ளி சங்க பொது செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பள்ளி மீது ஏற்கனவே இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். மாணவர்களின் டிசிக்களை கூட தீ வைத்து உள்ளனர். இந்த சமூக விரோத கும்பல்களை கைது செய்ய வேண்டும். வரும் காலங்களில் எந்த கல்வி நிறுவனத்திலும் இது போன்ற வன்முறைகள் நடக்க கூடாது.

    கடலூர்

    கடலூர்

    அந்த பள்ளியில் செவ்வாய்க்கிழமை (இன்று) எங்கள் சங்கம் சார்பாக ஆய்வு செய்ய இருக்கிறோம். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டது. அவர்கள்தான் இதில் கருத்து தெரிவிக்க வேண்டும். விசாரணை நடக்கிறது. கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். உள்ளே திருட்டு நடந்துள்ளது. ஏசியை எல்லாம் தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர். இது போன்ற சம்பவம் தமிழ்நாட்டில் இப்படி நடந்ததே? இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது.

    விசாரணை

    விசாரணை

    விசாரணை சென்று கொண்டு இருக்கிறது. அவர்கள் முடிவு எடுக்கட்டும். யார் தவறு செய்து இருக்கிறார்களோ அவர்கள் தண்டிக்கப்படட்டும். நாங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்போம். தவறு செய்தது யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். பள்ளிகளும், மாணவர்களின் எதிர்காலமும்தான் எங்களுக்கு முக்கியம். பஸ்ஸை எரிப்பது எப்படி நியாயம் ஆகும்.

    பள்ளி தவறு

    பள்ளி தவறு

    பள்ளியில் தவறு நடந்ததை நீங்கள் பார்த்தீர்களா? விசாரணை முடியட்டும் சார், என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் செய்தியாளர் ஒருவர் பிரின்சிபல் அறையில் ஆணுறை இருந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. இதற்கு உங்கள் பதில் என்ன? என்று கேட்டதற்கு... நாங்கள் பார்த்தோமா? யாரவது போனவர்கள் கூட அங்கே ஆணுறையை போட்டு இருக்கலாம் தானே? வீடியோ எடுத்தவர்கள் ஆணுறையை போட்டு இருக்கலாம் தானே?

    ஆணுறை

    ஆணுறை

    இந்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. விசாரணை நடக்கிறது. இதற்கு எல்லாம் கருத்து சொல்ல முடியாது. தெரியாத விஷயங்களை நாங்கள் பேச போவது இல்லை. விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படட்டும், என்று தனியார் பள்ளி சங்க பொது செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+