போராடுங்க தப்பில்லை! அதுக்காக என்.எல்.சி.யை மூடச் சொல்வதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வைத்த ட்விஸ்ட்!
கடலூர்: என்.எல்.சி.யை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு போதும் ஏற்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி.தமிழ்நாட்டுக்கு தேவையா? என்றும் கடலூர் மாவட்டத்திலிருந்து அதனை வெளியேற்றாமல் ஓயமாட்டேன் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆக்ரோஷம் காட்டி வரும் நிலையில், பாலகிருஷ்ணன் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கோரிக்கைகள் இருக்கும் அதனால் அதனை நிறைவேற்றக் கோரி போராடலாம் என்றும் என்.எல்.சி.க்கு எதிராக போராட்டம் நடத்துவதை தவறு என்று சொல்லவில்லை எனவும் கூறியிருக்கிறார். ஆனால் அதே வேளையில் சுத்தமாக என்.எல்.சி.யை இழுத்து மூட வேண்டும் என்பதை ஏற்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் நலன், விவசாயத்தை பாதுகாப்பது என்ற கோணத்தில் அன்புமணி என்.எல்.சி. விவகாரத்தை பார்க்கும் நிலையில் தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நலன் என்ற கோனத்தில் பாலகிருஷ்ணன் என்.எல்.சி. விவகாரத்தை பார்க்கிறார்.
நெய்வேலி நிறுவனத்தை மூடிவிட்டால் அதன் பிறகு ஏற்படும் பாதிப்புக்கு யார் பதில் சொல்வது என்று வினவிய பாலகிருஷ்ணன், அது சமூகத்தில் பல நெருக்கடிகளை உருவாக்குவதோடு தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தடைக்கல்லாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனத்தை மூடச் சொல்வது நியாயமான கோரிக்கையா என பாமகவுக்கு சூசகமாக கேள்வி எழுப்பிய பாலகிருஷ்ணன், என்.எல்.சி. நிறுவனத்துக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதை உறுதி செய்தார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறினார். இதில் ஹைலைட் என்னவென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications