வீட்டில் பெட்டி பெட்டியாக குவார்ட்டர் வச்சிருக்கேன்.. எதுக்கு தெரியுமா.. சீமான் பரபரப்பு தகவல்
கடலூர்: வீட்டில் பெட்டி பெட்டியாக குவார்ட்டர் வாங்கி வைத்திருக்கிறேன் என சீமான் புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், நாம் தமிழர் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்தே போட்டியிடுகிறது. இதில் புதிய யுக்தியாக மற்ற கட்சிகள் 5 ஆயிரம் கொடுத்தால் நான் 50 ஆயிரம் தருவேன்.
கர்நாடகா பக்கத்து மாநிலமா இல்லை பகை நாடா. நீர்வளம் அவர்களுக்கு முக்கியம் என்றால், என் நில வளம் எங்களுக்கு முக்கியம் என முடிவுக்கு வருவோம். கருணாநிதிக்கும் திமுக அரசின் உரிமைத் தொகைக்கும் என்ன சம்மந்தம் உள்ளது. தவறான நிர்வாகம் நடக்க அதனை தேர்வு செய்த மக்களும்தான் காரணம்.
அன்று இந்தி தெரியாது போடா என்றவர்கள் இன்று இந்தி தெரியுமா வேலைக்கு வாங்க என அழைக்கிறார்கள். காவிரி நதி நீர் பிரச்சினையில் எதிர்க்கட்சியாக இருந்த போது திமுக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. என் காசை எடுத்து எனக்கு கொடுப்பதற்கு கருணாநிதி உரிமைத் தொகை என பெயர் வைக்கிறார்கள்.
அவருக்கும் உரிமை தொகைக்கும் என்ன சம்பந்தம். ஒரு நாளைக்கு 30 ரூபாய் சம்பாதிக்க முடியாத அளவு என் மக்களை பிச்சைக்காரியாக ஆக்கி வைத்துள்ளார்கள். என் வீட்டில் களை எடுக்கும், காய்கறி பறிக்கும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய், அது போக ஆண்களாக இருந்தால் குவார்ட்டரும் சேர்த்து கொடுக்கிறேன்.
குவார்ட்டர் கொடுத்தால்தான் ஆண்கள் வேலைக்கு வருகிறார்கள். அதற்காகவே பெட்டி பெட்டியாக குவார்ட்டர் வாங்கி வைத்திருக்கிறேன் என கூறினார். அரசியல்வாதிகள் நடத்தும் பொதுக் கூட்டங்களில் குவார்ட்டரும், பிரியாணியும் வாங்கி கொடுத்து மக்களை கெடுக்கிறார்கள் என சக அரசியல்வாதிகளை குற்றம்சாட்டி வரும் நிலையில் சீமான் தன் வீட்டில் குவார்ட்டர் பாட்டில்களை வாங்கி வைத்திருக்கிறேன் என கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற, சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. எந்த தேர்தலிலும் வெல்லாவிட்டாலும் வாக்கு வங்கி என்பது கூடிக் கொண்டே இருக்கிறது. இதுதான் இந்த கட்சியின் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற சீமானின் நிலைப்பாடு இளைஞர்களை ஈர்க்கிறது. அதனால் அவருடைய கட்சியில் இளைஞர் படை அதிகமாக இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications