கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆக்‌ஷன் திமுக".. ஆப்படிக்கும் ஆபரேஷன்.. கொந்தளித்த டிஜிபி சைலேந்திரபாபு.. பறந்த ஆர்டர்.. என்ன காரணம்

கந்துவட்டி கொடுமையையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிகை அனுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

கடலூர்: கந்துவட்டி கொடுமை மீண்டும் தலைதூக்கி உள்ள நிலையில், ஒரு உயிர் பரிதாபமாக போயுள்ளது. இது தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடந்த சம்பவம் இதுதான்:

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மதுவானைமேடு துறிஞ்சிக்கொல்லையை சேர்ந்தவர் செல்வக்குமார்,, 27 வயதாகிறது.. இவர் உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

கடந்த 1-ம் தேதி கடலூர் வந்திருந்த அவர், கோர்ட் பக்கத்தில் திடீரென மயங்கி கீழே விழுந்தார்... இது பற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸார், விரைந்து சென்று, மயங்கி கிடந்த செல்வக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சட்டம் ஒழுங்கு மிக சிறப்பு...ஆபரேசன் கஞ்சா அரஸ்ட்...குற்றம் செய்தால் குண்டாஸ் பாயும் - சைலேந்திரபாபு சட்டம் ஒழுங்கு மிக சிறப்பு...ஆபரேசன் கஞ்சா அரஸ்ட்...குற்றம் செய்தால் குண்டாஸ் பாயும் - சைலேந்திரபாபு

அனிதா

அனிதா

அதாவது, குடும்ப செலவுக்காக அனிதா என்ற பெண்ணிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம் செல்வக்குமார்.. அந்த பணத்தையும் முழுமையாக திருப்பி தந்துவிட்டாராம்... ஆனாலும், அனிதா, புரோ நோட்டை தராமல், மறுபடியும் பணம் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார்.. இதனால் மன வேதனை அடைந்த செல்வக்குமார் விஷம் குடித்துவிட்டு, போலீஸ் எஸ்பி ஆபீசுக்கு வந்துள்ளார்.. அங்கே நடந்து வந்தபோதுதான் திடீரென மயங்கி விழுந்துவிட்டது தெரியவந்துள்ளது.

ஆஸ்பத்திரி

ஆஸ்பத்திரி

இதனிடையே, அவரது உடல் நிலை மோசமானதால், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.. ஆனாலும், உயிரை காப்பாற்ற முடியவில்லை.. நேற்று காலை உயிரிழந்தார்.. அதாவது, தான் வாங்கிய கடன் ரூ.5 லட்சம் அனிதாவுக்கு தந்துவிட்டாராம்.. ஆனாலும் ரூ.12 லட்சம் வேண்டும் என்று அனிதா மிரட்டி வந்துள்ளதார்.. இப்போது அனிதா கைதாகி உள்ளார்.. கடந்த சில காலமாகவே அமுங்கி கிடந்த கந்துவட்டி கொடுமை மீண்டும் தலைதூக்கி வருகிறது..

டார்ச்சர்

டார்ச்சர்

சில வருடங்களுக்கு முன்பு, கந்துவட்டி டார்ச்சர் தாங்காமல், நெல்லையை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர், தன் மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் கலெக்டர் ஆபீசில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. இந்த சம்பவம் தமிழகத்தை நிலைகுலைய வைத்தது.. ஒருகுடும்பமே தீயில் வெந்து இறந்ததை கண்டுமக்கள் துடிதுடித்தனர்.. அதற்கு பிறகு, 2 வருடங்களுக்கு முன்பும், ஒரு குடும்பம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது.. இந்த கந்துவட்டி கொடுமை குறித்து அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.. ஆனால், கடுமையான சட்டம் எதுவும் போடவில்லை..

சைலேந்திர பாபு

சைலேந்திர பாபு

இது போன்ற வழக்குகள் குறைவதற்கு தமிழக அரசால் தீவிர நடவடிக்கைகள் எதுதும் எடுக்கப்படாமலும் இருந்து வந்தது.. இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். கந்துவட்டி கொடுமைத் தொடர்பாக, வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்... 'ஆபரேஷன் கந்துவட்டி' நடவடிக்கை மூலம் கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஆபரேஷன் கந்துவட்டி

ஆபரேஷன் கந்துவட்டி

அதில் மேலும் உள்ளதாவது: "கந்துவட்டி கொடுமை தொடர்பான புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டி தொடர்பான வழக்குகளை கையாள 'ஆபரேஷன் கந்துவட்டி' என்ற சிறப்பு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. கந்துவட்டி தொடர்பாக காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டிகாரர்களின் இருப்பிடங்களை உடனடியாக சோதித்து, கையெழுத்துப் பெற்ற காகிதங்கள், சட்ட விரோதமான ஆவணங்கள், தொகை குறிப்பிடப்படாத காசோலைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
who is anita and why did cuddalore police arrest kanduvatti anita அனிதா என்பவரை கந்துவட்டி கொடுமையால் போலீசார் கைது செய்தனர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X