நான் என்ன அடிமையா? இது ‛கொலைவெறி’ தாக்குதல்.. சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் பற்றி பக்தர் விளக்கம்
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவபக்தரை தாக்கியதாக 2 தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளள்ளது. இந்நிலையில் தான் நான் என்ன அடிமையா? என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என கோவிலில் நடந்த சம்பவம் குறித்து பக்தர் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்திப்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று சிவபுரி கிராமத்தை சேர்ந்த கார் வண்ணன் என்ற சிவபக்தர் சென்றார். அப்போது சாமி வீதி உலா வந்தது.
#சிவபக்கதர்_தாக்கபட்டார்#சிதம்பரம்_நடராஜர் கோயில் #தீட்சிதர்கள் இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.…#சிவபக்தரை தாக்கிய புகாரின் பெயரில் காவல்துறை நடவடிக்கை.....
— RAMJI (@RAMJIupdates) June 23, 2023
*****
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவ பக்தரான கார்வண்ணன் இவர்… pic.twitter.com/MItRgOy3jE
இதையடுத்து சாமி தரிசனம் செய்ய கார்வண்ணன் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் சாமி வீதி உலாவுக்கு எதிரே நின்றதாக தெரகிறது. அப்போது கார்வண்ணன் மற்றும் தீட்சிதர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றவே 2 தீட்சிதர்கள் கார்வண்ணனின் கன்னத்தில் தாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில், காயம் அடைந்த கார்வண்ணன் சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சபாபதி தீட்சிதர் மற்றும் ஸ்ரீ வர்ஷன் தீட்சிதர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தான் கோவிலில் நடந்த சம்பவம் குறித்து சிவபக்தர் கார் வண்ணன் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. நான் கடந்த 15 நாட்களாக வழக்கமாக தினமும் காலையில் கோவிலுக்கு சென்று வருகிறேன். அதுபோல் தான் கோவிலுக்கு வந்தேன். கோவிலில் ஓரமாக நின்றேன். அப்போது வந்த தீட்சிதர் ‛ஏ இங்கெல்லாம் ஏன் நிற்கிறார்.. போயா அங்கீட்டு' என பேசினார்.
இதையடுத்து நான், ‛‛நான் என்ன உங்கவிட்டு அடிமையா? மாட்டுக்காரனா? பண்ணை அடிமையா?'' என கேள்வி கேட்டேன். ஒருவர் இன்னொருவரிடம் எப்போதும் தன்மையாக பேச வேண்டும். சுயமரியாதை கொடுக்க வேண்டும். என்னால் இடையூறு இல்லாதபோது அநாவசியமாக நடப்பது, எதேச்சதிகாரமாக நடப்பது உள்ளிட்டவை எல்லாம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதுபோல் நடந்து கொள்ளும் தீட்சிதர்கள் 60 சதவீதம் இருக்கிறார்கள். நான் அன்றாடம் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். அன்பாக, பண்பாக, பணிவாக பேசக்கூடிய தீட்சிதர்களும் குறிப்பிட்ட சதவீதம் உள்ளனர். இது சாமி காரியம். இதில் இன்னும் ஆழமாக போக விரும்பவில்லை. என்னை வலுவாக தாக்கினர். இடிபோல் அடி விழுந்தது. மருத்துவமனைக்கு சென்றேன். மருத்துவ சிகிச்சை தொடர்பான ரிசல்ட் திங்கட்கிழமை வரும்'' என்றார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications