பல கோடி.. சுவர்களில் ஏற்பட்ட விரிசல்.. கள்ளக்குறிச்சி பள்ளியின் தற்போதைய நிலை என்ன? பரபர பின்னணி
கடலூர்: கடலூர் கள்ளக்குறிச்சி பள்ளிக்கு தீ வைக்கப்பட்ட நிலையில் அங்கு இருக்கும் பல்வேறு சுவர்களில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மீண்டும் வகுப்புகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 12ம் தேதி பலியானார். இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் அங்கு கலவரங்கள் நடத்தப்பட்டன.
கள்ளக்குறிச்சி பள்ளியின் வாசலில் நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்தது. இது தொடர்பாக போலீசார் தரப்பு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. மாணவி மரணம் தொடர்பாக தனியாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.

கும்பகோணம்
2004ல் கும்பகோணம் பள்ளி தீ விபத்திற்கு பின்புதான் இந்த பள்ளிக்கூடம் கான்கிரீட் கட்டிடமாக மாற்றப்பட்டுள்ளது. அதன்பின் வேகமாக வளர்ந்து பல அடுக்கு பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் மொத்தம் 170 வகுப்பறைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் 17 பேருந்துகள் இந்த கலவரத்தில் தீ வைக்கப்பட்டு உள்ளன.

கான்கிரீட்
பள்ளிக்கு சொந்தமான 2 டிராக்டர், அதேபோல் ஒரு ஜெனரேட்டர், 30 பைக்குகள், இரண்டு எர்த் மூவர், 3 கார்கள், ஒரு போலீஸ் ஜீப் ஆகியவை தீ வைக்கப்பட்டு உள்ளன. 500 சீலிங் பேன் நொறுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பெரிய கேன்டின் மொத்தமாக அடித்து நொறுக்கப்பட்டு, அங்கிருந்து உணவு பொருட்கள் திருடி செல்லப்பட்டு உள்ளன. அதேபோல் கம்ப்யூட்டர் லேப் மொத்தமாக அடித்து நொறுக்கப்பட்டு உள்ளது.

தீ வைக்கப்பட்டுள்ளது
அதன்பின் உள்ளே தீ வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 100 கணினிகள் இதில் தீ வைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 10-12 கோடி ரூபாய் வரை இதில் சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்பு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போக மாணவர்களின் டிசி உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மொத்தமாக தீ வைக்கப்பட்டு உள்ளது. அங்கு இருக்கும் சுவர்கள் மொத்தமாக சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தீயணைப்பு துறை
தீயணைப்பு துறை தகவலின்படி.. தீ வைக்கப்பட்ட காரணத்தால் அங்கு உள்ள சுவர்கள் பல உடைந்து காணப்படுகின்றன. சுவர்களில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மாடியில் உள்ள கட்டிடங்களில் தரைப்பகுதி தீ காரணமாக பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியை உடனே திறப்பது கடினம் என்று போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது. விரிசல் காரணமாக பள்ளியை உடனே திறப்பது ரிஸ்க் என்கிறார்கள்.
Recommended Video

எப்போது திறப்பு
பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என்றால் அதற்கு பல்வேறு துறை அனுமதி வேண்டும். தீயணைப்பு துறை தொடங்கி பல துறைகள் என்ஓசி கொடுக்க வேண்டும். ஆனால் அங்கு சீரமைப்பு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதெல்லாம் தொடங்கி பள்ளி முழுமையாக ஆரம்பிக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதுவரை மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications