கூலி தொழிலாளி கொலை வழக்கு.. தி.மு.க எம்.பி ரமேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி.. நீதிமன்றம் உத்தரவு!
கடலூர்: கூலி தொழிலாளி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கடலூர் தி.மு.க எம்பி ரமேசின் ஜாமீன் மனுவை கடலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பணிக்கன் குப்பம் பகுதியில் கடலூர் தி.மு.க எம்பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது.
இங்கு வேலை செய்த கூலி தொழிலாளி கோவிந்தராஜ் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கூலி தொழிலாளி கொலை
முதலில் இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறை விசாரித்து பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையில் கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் கடலூர் எம்.பி.ரமேஷ் அவரது உதவியாளர் நடராஜன் மற்றும் கந்தவேல், அல்லாபிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கடலூர் எம்.பி.ரமேஷை தவிர மற்ற 5 பேரையும் முதலில் கைது செய்தனர்.

கடலூர் எம்.பி ரமேஷ்
கடந்த 11-ம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் கடலூர் எம்.பி ரமேஷ் சரணடைந்தார். இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 13-ம் தேதி கடலூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அன்றைய தினமே சி.பி.சி.ஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நட்த்தினார்கள். அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கடலூர் எம்.பி ரமேஷை 27-ம் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க கடலூர் முதன்மை குற்றவியல் நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.

ஜாமீன் கேட்டு மனு
கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கடலூர் எம்.பி ரமேஷ் ஜாமீன் கேட்டு நேற்று முன்தினம் கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, டலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவிந்தராஜ் தரப்பில் இருந்து, தடை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

தள்ளுபடி செய்யப்பட்டது
அந்த மனுவை முழுமையாக படிக்க கால அவகாசம் வேண்டும் என தி.மு.க ரமேஷின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை இன்று ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றதில் ரமேஷ் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது விசாரணை முடிவில் நீதிபதி ஜவகர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications