டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவில் இவர்.. காங்கிரஸுக்கு அவர்.. தொங்கு சபை உருவானால் இவர்கள்தான் பிரதமர் ரேஸில் இருப்பார்கள்!

வரும் லோக் சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சபை உருவானால் கண்டிப்பாக பிரதமர் மோடியோ, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ பிரதமர் ஆக வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி, ராகுலுக்கு பதில் இவர்களுக்கும் பிரதமர் ஆகும் வாய்ப்பு- வீடியோ

    டெல்லி: வரும் லோக் சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சபை உருவானால் கண்டிப்பாக பிரதமர் மோடியோ, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ பிரதமர் ஆக வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.

    லோக் சபா தேர்தலுக்காக இந்தியா தயாராகிக் கொண்டு இருக்கிறது. ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் இந்த பெரிய திருவிழாவில் பிரியாணியாக போவது யார், அதை சுவைக்க போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு இருக்கிறது. மாறாக பாஜக தனது பழைய கூட்டணியை தக்க வைத்துக்கொள்ள முயன்று கொண்டு இருக்கிறது.

    தொங்கு சபை

    தொங்கு சபை

    இந்த லோக் சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சபை உருவாக வாய்ப்பு இருப்பதாகவோ எல்லோரும் கூறுகிறார்கள். இதுவரை வந்து கருத்து கணிப்புகள் எல்லாம் அதையே கூறியுள்ளது. சராசரியாக இதுவரை வந்து கருத்து கணிப்புகளின்படி

    பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணி - 237

    காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி - 166

    மற்ற மாநில கட்சிகள் - 107

    பெரிய உறுதி

    பெரிய உறுதி

    லோக் சபாவில் மொத்தம் 543 உறுப்பினர்கள் தேவை. இதில் மெஜாரிட்டி பெற 272 உறுப்பினர்களின் பலம் தேவை.அதனால், மாநில கட்சிகள், சிறிய கட்சிகளின் ஆதரவு யாருக்கோ அவர்களே 2019 தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்க முடியும் என்று தேர்தல் கருத்து கணிப்பில் கூறப்பட்டு இருக்கிறது. இதனால் நாடாளுமன்றத்தில் தொங்கு சபை உருவாவது உறுதியாகி உள்ளது.

    இருவருக்கும் வாய்ப்பில்லை

    இருவருக்கும் வாய்ப்பில்லை

    இந்த நேரத்தில்தான் பாஜக சார்பாக பிரதமராக மீண்டும் மோடியோ, காங்கிரஸ் சார்பில் பிரதமராக ராகுல் காந்தியோ தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கும் யாரும் இவர்கள் இருவரையும் ஆட்சிக்கு வருவதை விரும்ப மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

    பாஜகவில் யார்

    பாஜகவில் யார்

    பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பாஜகவில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடிக்கு பதிலாக பிரதமராக முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது . ஆர்எஸ்எஸ் மட்டுமில்லாமல் பாஜகவில் உள்ள சில மூத்த தலைவர்களும் கூட இதேதான் கூறுவதாக தகவல்கள் வருகிறது. சில கட்சிகள் இந்த கோரிக்கையை வைத்துதான் பாஜகவுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளும் என்கிறார்கள்.

    காங்கிரஸ் வாய்ப்பு

    காங்கிரஸ் வாய்ப்பு

    அதேபோல் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு பதிலாக பிரியங்கா காந்தி முன்னிறுத்தப்படலாம் என்று கூறுகிறார்கள். தொங்கு சபை உருவாகி சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், காங்கிரஸ் கட்சி இந்த கோரிக்கையை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் ராகுலை விட பிரியங்கா மீது மாநில கட்சிகள் பெரிய அளவில் நம்பிக்கை வைத்து இருக்கிறது.

    மூன்றாவது நபர்

    மூன்றாவது நபர்

    ஒரு வேளை காங்கிரஸ் பாஜக இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வரமால் வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் என்றால் அது கண்டிப்பாக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜிதான் என்கிறார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மமதா பானர்ஜி ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இந்த பல்வேறு கணக்குகளால் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது.

    English summary
    2019 Lok Sabha Election: BJP and Coongress has to choose some other option if Hung aasembly happens as said in Opinion polls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X