பாஜகவும் வேண்டாம்.. காங்கிரஸும் வேண்டாம்.. 3வது அணியை உருவாக்கும் சந்திரசேகர ராவ்.. பலே திட்டம்!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நாடாளுமன்ற தேர்தலுக்காக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்.
டெல்லி: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நாடாளுமன்ற தேர்தலுக்காக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் பேச்சுவார்த்தைகள் தற்போதுதான் சூடு பிடித்து இருக்கிறது. ஏற்கனவே பாஜக பீகாரில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி கூட்டணியை இறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் தற்போது மூன்றாவது அணி ஒன்று உருவாவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

காங்கிரஸ் கூட்டணி
ஆந்திர முதல்வர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முன்னெடுப்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாகும் நிலையில் உள்ளது. காங்கிரஸ், திமுக இந்த கூட்டணியில் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் உள்ளது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இந்த கூட்டணியில் இணையும் நிலையில் உள்ளது.

மூன்றாவது அணி திட்டம்
இந்த நிலையில்தான் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நாடாளுமன்ற தேர்தலுக்கு மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் இல்லாத கூட்டணியை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதேபோல் மாநில கட்சிகள் அனைத்தையும் இணைக்க முடிவெடுத்துள்ளார்.

இன்று சந்தித்தார்
அதேபோல் இன்று இதற்காக சந்திரசேகர ராவ் ஒடிசா முதல்வர் பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நவீன் பட்நாயக்கை சென்று சந்தித்தார். இன்று மாலை சந்திரசேகர ராவ் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பலே திட்டம்
இதேபோல் இன்னும் சில மாநில கட்சிகளின் தலைவர்களையும் சந்திரசேகர ராவ் சென்று நேரில் சந்திக்க உள்ளார். இந்த மாதம் முழுக்க அவர் அடுத்தடுத்து தலைவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் அரசியல் முன்னெடுப்பு தேசிய அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications