ஜி 20 உச்சி மாநாடு நடத்த 300 மடங்கு அதிக செலவா? வெடித்த சர்ச்சை.. மத்திய அரசு விளக்கம்
டெல்லி: ஜி 20 உச்சி மாநாடு நடத்த 300 மடங்கு அதிக செலவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஜி 20 மாநாட்டில் அங்கம் வகிக்கின்றன. ஜி 20 உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு ஜி 20 உச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தோனேசியா ஜி20 உச்சி மாநாட்டுக்கு தலைமை வகித்தது. நடப்பு ஆண்டில் இந்தியா ஜி 20 மாநாட்டை ஏற்று நடத்தியது. கடந்த இரு தினங்களாக ஜி 20 மாநாடு நடைபெற்றது. ஜி 20 மாநாட்டை சிறப்பாக நடத்த பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டது.
பாதுகாப்பு செலவீனங்களை தவிர்த்து டெல்லியை அழகுபடுத்துதல் ஜி 20 மாநாட்டு அரங்கம் என பலவேறு ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக இந்தியா செய்தது. ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதற்காக டெல்லி முழுவதும் களைகட்டியிருந்தது. நேற்று 2-ம் நாள் மாநாட்டு நிகழ்வுகள் நடந்தன.
இதில் முக்கியமாக 'ஒரே எதிர்காலம்' என்ற தலைப்பில் 3-வது அமர்வு நடந்தது. இதில் ஜோ பைடன் உள்பட உலக தலைவர்கள் பேசினர். பிரதமர் மோடி இறுதி உரை நிகழ்த்தினார். தொடர்ந்து , மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், மாநாட்டையும் முறைப்படி பிரதமர் மோடி முடித்து வைத்தார். இதனிடையே ஜி 20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட 300 மடங்கு அதிக செலவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி பலரும் பதிவிட்டு வந்தனர். அதாவது ஜி 20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு பட்ஜெட்டில் ரூ.900 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ரூ. 4,100 கோடி செலவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, சர்வதேச வர்த்தக மையம் கட்டிடத்தின் நிரந்தரமான கட்டமைப்புகள் மற்றும் சில கட்டுமானங்கள் பணிக்காகவும் இந்த தொகை செலவு செய்யப்பட்டதாகவும் ஜி 20 உச்சி மாநாடு நடத்துவதற்காக மட்டும் இவ்வளவு செலவு செய்யவில்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications