அக்னிபாத் திட்டம் பற்றி தகவல் பரப்பிய 35 வாட்ஸ்அப் குழுக்கள் முடக்கம்.. 10 பேர் கைது..!
டெல்லி: அக்னிபாத் திட்டம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாக 35 வாட்ஸ் அப் குழுக்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 'அக்னிபாத்' என்ற திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜூன் 14ல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருக்க வாய்ப்பளிக்கப்படும். 4 ஆண்டு பணியை முடித்து வெளியில் செல்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. இந்த திட்டம் மூலம் இந்தியாவின் முப்படைகளையும் இளமையாக இளைஞர்கள் நிறைந்ததாக வைத்து கொள்ளலாம் என ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஆனால் அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டம் நீண்டநாள் ராணுவ சேவையாற்ற விரும்பும் இந்திய இளைஞர்களின் விருப்பத்துக்கு மாறாக உள்ளது. மேலும் ஒப்பந்த பணியாக ராணுவ சேவை மாற்றப்படுவதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. ரயில்கள் எரிக்கப்பட்டு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதனிடையே இளைஞர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. நேற்று காங்கிரஸ் கட்சி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டது. தொடர்ந்து இந்திய ராணுவத்தின் மூத்த நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து, அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ராணுவத்தில் சேர்க்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தார். இருந்தும் இளைஞர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அதேபோல் ராணுவத்தில் சேர பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தான் இளைஞர்களை தூண்டிவிடுவதாக தகவல்கள் வெளியாகியது. இந்தநிலையில், அக்னிபாத் திட்டம் குறித்து தவறான தகவல் பரப்பியதாக கூறி 35 வாட்ஸ் அப் குழுக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இதுபோல் அரசின் திட்டத்திற்கு எதிராக தவறான தகவல்களை பரப்புபவர்களை கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், போராட்டத்தை தூண்டியதற்காகவும், அக்னிபாத் திட்டம் பற்றி தவறான தகவல்களை பரப்பியதாகவும் கூறி 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications