தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் 37 சதவீத குழந்தைகள் ஆன்லைனில் படிப்பதில்லை.. பகீர் சர்வே முடிவுகள்
டெல்லி: கிராமப்புற பகுதிகளில் 37 சதவீத குழந்தைகள் படிப்பதில்லை, வெறும் 8 சதவீதம் குழந்தைகள் மட்டுமே ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்கிறார்கள் என ஒரு சர்வே அதிர்ச்சியூட்டும் தகவலை சொல்கிறது.
கொரோனா காலம் என்பதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே படித்து வருகிறார்கள். ஆன்லைன் மூலம் இவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வகுப்புகளுக்கு செல்போன், இன்டர்நெட் இணைப்பு ஆகியவை தேவை என்பதால் பல மாணவர்களால் இந்த வகுப்புகளை கவனிக்க முடிவதில்லை. இந்த நிலையில் ஆன்லைனில் வகுப்புகள் குறித்து பள்ளி குழந்தைகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கற்றல் (School) என்ற அமைப்பு சர்வே எடுத்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் அஸ்ஸாம், பீகார், சண்டிகர், டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஸா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதில் கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதை அடுத்து அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை அறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதுகுறித்த முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் 48 சதவீதம் குழந்தைகளுக்கு சில வார்த்தைகளுக்கு மேல் படிக்கத் தெரியவில்லை. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒரு லெவலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை இன்னொரு லெவலும் சர்வே பிரித்தெடுக்கப்பட்டது.
கிராமப்புறங்களில் உள்ள எஸ்டி, எஸ்சி பிரிவினரில் 4 சதவீதம் பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் படித்து வருகிறார்கள். எஸ்சி, எஸ்டி பிரிவினரில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என 98 சதவீத பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.
அது போல் ஆன்லைன் வகுப்பு குறிப்பிட்ட அளவுடனே சென்றடைகிறது என்பதையும் சர்வே சொல்கிறது. நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 24 மற்றும் 8 சதவீதம் பேர் ஆன்லைனில் தினந்தோறும் தவறாமல் படித்து வருகிறார்கள். ஸ்மார்ட் செல்போன் இல்லாத காரணத்தால் நிறைய பேரால் படிக்க முடியவில்லை என்று சர்வே கண்டறிந்துள்ளது.
நகர்ப்புறங்களில் 30 சதவீதம் பேரிடமும் கிராமப்புறங்களில் 36 சதவீதம் பேரிடமும் செல்போன் இல்லை. அப்படியே செல்போன் இருந்தாலும் இணையதள இணைப்பு சரி வர கிடைக்காமல் இரு இடங்களில் தலா 9 சதவீதம் பேர் உள்ளனர். அது போல் இணையதளத்திற்கு பண வசதி இல்லாமல் நகர்ப்புறங்களில் 9 சதவீதம் பேரும் கிராமப்புறங்களில் 6 சதவீதம் பேரும் உள்ளனர்.
நகர்ப்புறங்களில் 51 சதவீதம் பேரும் கிராமப்புறங்களில் 58 சதவீதம் பேரும் தினந்தோறும் தங்கள் ஆசிரியர்களை பார்க்கவில்லை என்பதையும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. ஆசிரியருக்கும் மாணவருக்குமான ஒரு பாண்டிங் என்பதே இந்த ஆன்லைன் வகுப்பில் இல்லாமல் போயுள்ளது. பள்ளிகள் மூடியதால் சத்துணவு நிறுத்தப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள எஸ்டி, எஸ்சி பிரிவினரில் 4 சதவீதம் பேர் மட்டுமே ஆன்லைன் வழக்கமாக மூலம் படித்து வருகிறார்கள். எஸ்சி, எஸ்டி பிரிவினரில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என 98 சதவீத பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications