புருவம் உயர்த்திய ஜப்பான்.. உலகிற்கே வழிகாட்டும் இந்தியாவின் யுபிஐ.. ஆர்வம் காட்டும் உலக நாடுகள்!
டெல்லி: இந்தியாவில் பெட்டிக்கடை முதல் ஐந்து நட்சத்திர விடுதிகள் வரை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படும் 'யுபிஐ' பண பரிவர்த்தனை சேவையை கொண்டுவர ஜப்பான் விரும்புகிறது. அதற்கான சுவாரஸ்யமான காரணத்தை இப்போது பார்ப்போம்.
ஜப்பான், இங்கிலாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், பூடான், நேபாளம், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, தென்கொரியா உள்பட ஏராளமான நாடுகள் 'யுபிஐ' பண பரிவர்த்தனை சேவையில் ஆர்வம் காட்டுகின்றன.
கியூஆர்கோடு மூலம் பணம் அனுப்பும் சேவையான யுபிஐ பண பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. சிறிய வண்டிக்கடை, பெட்டிக்கடை, ரோட்டில் தேநீர் விற்பவர், பழம் விற்பவர் என பலரும் இப்போது யுபிஐ சேவையில் தான் பணத்தை பெறுகிறார்கள். மக்களும் சில்லறையை கொடுப்பதற்கு பதில் டிஜிட்டல் சேவையில் பணத்தை செலுத்த தொடங்கிவிட்டனர்.
'யுபிஐ' எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI - Unified Payments Interface) இந்தியா முழுவதும் வங்கி சேவையை மக்களுக்கு எளிதாக்கிவிட்டது. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் லாப நோக்கமற்ற நிறுவனமான இந்திய தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் (NPCI) நிறுவனம் தான் இந்த யுபிஐ சேவையை செய்து வருகிறது. யுபிஐ சேவை முறை கடந்த 2016 ஏப்.11-ம் தேதி அறிமுகம் ஆனது.
இரு வங்கி கணக்குகள் இடையே உடனடியாக பண பரிவர்த்தனையையும் இந்த யுபிஐ அனுமதிக்கிறது. இதன் மூலம் உடனடி பண பரிவர்த்தனைகள் 24 மணி நேரமும் செய்யப்படுகிறது. யாருமே வங்கி கணக்கு விவரங்களை நிரப்ப வேண்டிய அவசியமின்றி, ஆதார் எண், செல்போன் எண், வாடிக்கையாளரின் இ-மெயில் முகவரி மூலம் ஒரு ஸ்மார்ட்போனில் பணத்தை அனுப்பவோ, பெறவோ முடிகிறது.
நாடு முழுவதும் 10 கோடி பேர் யுபிஐ தளத்தை பயன்படுத்தி பணப்பரிமாற்றத்தை இந்தியாவில் செய்து வருகிறார்கள். இது அறிமுகம் செய்யப்பட்ட ஒரே ஆண்டில் (2017ல்) யுபிஐ பண பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 9.36 மில்லியனாக இருந்தது. ஆனால் தற்போது 9415 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து வரும் யுபிஐ பணப் பரிவர்த்தனை முறையை தங்கள் நாடுகளிலும் கொண்டுவர 40-க்கும் மேற்பட்ட நாடுகள் விரும்பியுள்ளன. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறும் போது, யுபிஐ மூலம் கடந்த மே மாதம் வரை ரூ.14.89 லட்சம் கோடி அளவுக்கு பணம் பரிவர்த்தனை நடந்துள்ளது. மக்கள் மத்தியில் யுபிஐ பிரபலம் அடைந்துள்ளதோடு, நம்பிக்கையையும் பெற்றிருப்பதாலேயே இந்த அளவிற்கு சேவைகள் அதிகரித்துள்ளது. மக்கள் யுபிஐ மூலம் விரைவாக, எளிதாக, பாதுகாப்பாக, மின்னணு முறையில் பணம் அனுப்பி வருகிறார்கள்

யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்வதை உலக நாடுகளும் பின்பற்ற தொடங்கியுள்ளன. சிங்கப்பூர், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஓமன், சவுதி அரேபியா, மலேசியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் யுபிஐ முறையை தங்கள் நாடுகளில் அறிமுகம் செய்திருக்கின்றன.
சமீபத்தில் ஜப்பான் நாட்டின் மின்னணு துறை அமைச்சர் கோனோடாரோ, டெல்லிக்கு வந்தார். அங்குள்ள காபி ஷாப்புக்கு சென்றுள்ளார். அங்கு வந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் மின்னணு முறையில் பணம் செலுத்தியதை கண்டு ஆச்சரியப்பட்டார். ஜப்பான் திரும்பிய அவர் உடனடியாக தங்கள் நாட்டிலும் யுபிஐ பணப்பரிவர்த்தனை முறையை செயல்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அங்கு விரைவில் யுபிஐ சேவை ஆரம்பம் ஆக உள்ளது.
இங்கிலாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், பூடான், நேபாளம், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, தென்கொரியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளும் யுபிஐ மின்னணு பணப்பரிவர்த்தனை சேவையை தொடங்க விரும்புகின்றன.இதற்காக, இந்தியாவுடன் அந்நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன" என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறினார்கள்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications