தடுப்பூசி மட்டுமே கொரோனாவிற்கு எதிரான தற்காப்புக் கவசம் - இதை அவசியம் ஃபாலோ பண்ணுங்க

இந்தியாவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இணை நோய்கள் இருப்போர் மற்றும் இல்லாதோர் அனைவரும் தடுப்பூசி செலுத்தலாம். ஜனவரி 1,1977ஆம் தேதிக்கு முன்பு பிறந்த அனைவரும் தடுப்பூசி போட தகுதியானவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேர கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில், 81 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு நான்காவது நாளாக 40ஆயிரத்தை எட்டியுள்ளதால், அதிக பாதிப்புள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இணைநோய் இல்லாதவர்களும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ளவேண்டுமென பிரகாஷ் ஜவடேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 தடுப்பூசி அவசியம்

தடுப்பூசி அவசியம்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் ஜனவரி 16ஆம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. முன்கள பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 8 வாரங்களாக அதிகரிப்பு

8 வாரங்களாக அதிகரிப்பு

கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்ட பின் 2வது டோஸ் செலுத்தும் காலம் 28 நாட்களில் இருந்து 8 வாரங்களுக்குப் பின் செலுத்த வேண்டும் என நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், மருந்தின் செயல்திறனை அதிகப்படுத்த மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனைக்குப் பின் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

 தகுதியானவர்களுக்கு தடுப்பூசி

தகுதியானவர்களுக்கு தடுப்பூசி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகளான கோவாக்ஸின், கோவிஷீல்ட் இரு மருந்துகளும் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன. பிரதமர் மோடிகூட கோவாக்ஸின் தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொண்டார். ஆதலால், எந்தத் தடுப்பு மருந்தையும் தகுதியான வயதினர் எடுக்கலாம். இரு மருந்துகளுக்கு இடையே இடைவெளி எத்தனை நாட்கள் என்பது மருத்துவரின் ஆலோசனைப்படி இருக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இதுவரை 5 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 தடுப்பூசி போடுவதற்கான இடைவெளிகள்

தடுப்பூசி போடுவதற்கான இடைவெளிகள்

தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தியவர்கள் ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் இதன் மூலம் தடுப்பூசியின் பாதுகாப்பு அதிகரிக்கும். எட்டு வாரங்களுக்கு மேல் தள்ளிப்போட வேண்டாம் என்பது மத்திய அரசின் அறிவுரையாகும்.

 தடுப்பூசிக்கு பதிவு செய்வது எப்படி

தடுப்பூசிக்கு பதிவு செய்வது எப்படி

ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்னதாக கோவின் போர்ட்டலில் பதிவு செய்வது அவசியம். முதல் டோஸ் எடுத்துக்கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் போடுவதற்கு 29 நாட்களில் எப்போது செலுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்து பதிவு செய்யலாம்.
கோவின் போர்ட்டல் அல்லது ஆரோக்யா சேது செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

 தடுப்பூசி அவசியம்

தடுப்பூசி அவசியம்

முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் www.cowin.gov.in இணையதளத்தில் இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கு தங்களுக்கு வசதியான நாள், நேரத்தை தேர்வு செய்து பதிவு செய்யலாம்.

 தடுப்பூசி போட தகுதியானவர்கள்

தடுப்பூசி போட தகுதியானவர்கள்

ஜனவரி 1,1977ஆம் தேதிக்கு முன்பு பிறந்த அனைவரும் தடுப்பூசி போட தகுதியானவர்கள். 45 வயதுடைய அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்ட பிறகு சான்றிதழ் பெற்றுக்கொள்வது அவசியம்.

 சான்றிதழ்

சான்றிதழ்

கோவிட் தடுப்பூசி அரசு மருத்துவமனையில் இலவசமாக போடப்படுகிறது. அதற்கான சான்றிதழும் பெற்றுக்கொள்ளலாம். தனியார் மருத்துவமனையில் தடுப்பூசிக்கு ரூ.250 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட உடன் சான்றிதழ் பெற்றுக்கொள்வது அவசியம். சான்றிதழ் தராத, மத்திய அரசின் நடைமுறைகளை பின்பற்றாத மருத்துவமனைகள் பற்றி 1075 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் அழைத்து புகார் தரலாம்.

 தடுப்பூசிக்கு பஞ்சமில்லை

தடுப்பூசிக்கு பஞ்சமில்லை

நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் அதிக அளவில் இருப்பில் உள்ளன. தட்டுப்பாடு இல்லாமல் பதிவு செய்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோவின் இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் புதிதாக அப்பாயிண்ட் மெண்ட் பெற வேண்டிய அவசியமில்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. புகார்களை 1075 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் பதிவு செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+