சூடுபிடிக்கும் 5 மாநில தேர்தல்.. எப்போது நடைபெறும்? தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை
டெல்லி: விரைவில் ராஜஸ்தான், மிசோரம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது.
அடுத்தாண்டு இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த லோக்சபா தேர்தலுக்கு இப்போது முதலே அனைத்து அரசியல் கட்சிகளும் பணிகளை ஆரம்பித்துவிட்டன.

அதேநேரம் அதற்கு முன்னதாக இந்தாண்டு இறுதியில் 5 மாநிலங்களில்- மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இது லோக்சபா தேர்தலுக்கு அரையிறுதியாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் திட்டமிட்டு வருகிறது. மேலும், தேர்தல் குறித்த அறிவிப்பை எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஐந்து மாநிலங்களில் அதற்கு முன்னதாக, தேர்தலைச் சுமூகமாக நடத்துவது குறித்த தேர்தல் ஆணையம் இன்று தனது பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறது. இன்று நாள் முழுக்க நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தேர்தல் விதிகளை நடைமுறைப்படுத்துவது, செலவுகளைக் கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
தேர்தல் ஆணையம் ஏற்கனவே ராஜஸ்தான், மிசோரம், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆரம்பித்துவிட்டது. அதேபோல தெலுங்கானாவிலும் விரைவில் தேர்தல் பணிகளை ஆரம்பிக்க உள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மிசோரம் சட்டப் பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அங்கே மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைகிறது.
அடுத்த சில நாட்களில் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று தேர்தல் ஆணையம் இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications