அதிகரித்து வரும் கொரோனா...மாநிலங்களிடம் மோடி அறிவுறுத்திய 5 விஷயங்கள் இது தான்
டெல்லி : இந்தியாவின் தினசரி கொரோனா அதிகரிப்பு சராசரியாக ஒரு லட்சத்தை கடந்து வருகிறது. மிக அதிகபட்சமாக இன்றே ஒரே நாளில் 1.27 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் செப்டம்பர் மாத மத்தியில் ஒரே நாளில் 98,000 பேருக்கு கொரோனா தொற்ற ஏற்பட்டதே உச்சபட்சமாக கருதப்பட்டது.
அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். போர் கால அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தவிர முக்கியமான 5 விஷயங்களை மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். அதன் விபரம் :

இரவு நேர ஊரடங்கு ஏன்
கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருவதால் மக்களிடம் எச்சரிக்கை விடுக்கவே சில பகுதிகள் மூடப்பட்டும் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டும் உள்ளது. மக்கள் நடமாட்டத்தை குறைக்கவே இரவு நேர ஊரடங்கு.

குடும்பம் முழுவதிற்கு சோதனை
அறிகுறி இல்லாத நோயாளிகளை கண்டறிவது அவசியம். அதனால் பரசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். பலர் அறிகுறி இல்லாமல் இருப்பதால் அவர்களின் ஒட்டுமொத்த கடும்பமும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஆர்டி - பிசிஆர் சோதனைகள் எடுக்கப்பட வேண்டும்.

இறப்பு விகித கண்காணிப்பு அவசியம்
பாசிடிவ் விகிதத்தை 5 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர வேண்டும். இறப்பு விகித புள்ளி விபரங்களும் முழுமையாக ஆராயப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் இவை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மருந்துகளை வீணடிக்க கூடாது
தடுப்பு மருந்துகள் வீணாக்கப்படுவதை தடுக்க வேண்டும். தடுப்பு மருந்து திருவிழாவை ஏப்ரல் 11 ல் துவங்கி 14 வரை மேற்கொள்ள உள்ளோம். தடுப்பு மருந்துகள் வீணாக்கப்படும் அளவை பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வந்து, தகுதியான அதிக மக்களுக்கு மருந்துகளை செலுத்த வேண்டும்.

அலட்சிய நபர்கள் மீது நடவடிக்கை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னர் அடங்கிய அனைத்துக் கட்சி கூட்டத்தை மாநிலங்கள் நடத்த வேண்டும். பெரிய அளவில் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications