கொரோனா வைரஸ்.. டெல்லியில் 69 வயது மூதாட்டி மரணம்.. இந்தியாவில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்வு
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு டெல்லியைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி இறந்ததை அடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது.
Recommended Video
மேற்கு டெல்லியைச் சேர்ந்தவர் 69 வயது மூதாட்டி ஆவார். இவரது மகன் கடந்த மாதம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்விட்சர்லாந்துக்கு சென்றுவிட்டு டெல்லி திரும்பினார்.

டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு பரிசோதனை செய்ததில் எந்த வித அறிகுறியும் தெரியவில்லை. இதையடுத்து அவருக்கு கடந்த மார்ச் 7-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டதை அடுத்து அவர் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அவரது 69 வயது தாய்க்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 9-ஆம் தேதி தாயின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அதே நாளில் அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (மார்ச் 13) உயிரிழந்தார். இதை டெல்லி சுகாதாரத் துறை செயலாளர் ப்ரீத்தி சுதன் உறுதிப்படுத்தினார்.

இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே கர்நாடகா மாநிலம் கல்புர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மூதாட்டியுடன் சேர்த்து டெல்லியில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications