Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏமாந்த மத்திய அரசு ஊழியர்கள்.. பட்ஜெட்டில் 8வது ஊதிய குழு அறிவிப்பு வராததால் கடும் கோபம் - வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2026-27 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று முன்தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் 8 வது ஊதிய குழு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், பிற அலோவன்ஸ் மற்றும் ஓய்வூதியங்களை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 8-வது ஊதிய குழுவை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.

8th pay commission union government government employees 8

இந்த ஊதிய குழுவை அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒப்புதல் வழங்கியது. அதன்பிறகு 8 வது ஊதியக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமிக்கப்பட்டார்.

8வது சம்பள கமிஷன் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அவர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்டவை கிடுகிடுவென அதிகரிக்கும். ஆனால் தற்போது வரை 8 வது ஊதியக்குழு தொடர்பான மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் 8 வது ஊதியக்குழு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதுபற்றி எதுவுமே தெரிவிக்கப்படவில்லை. இதனால் 2026ம் ஆண்டில் 8 வது ஊதியக்குழு பரிந்துரையில் சம்பளம், ஓய்வூதியம், பிற அலோவன்ஸ் உள்ளிட்டவை உயர்த்தப்பட்டு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி 8 வது சம்பள கமிஷன் மற்றும் பணியாளர் நலன் சார்ந்த பிரச்சனைகள் பற்றி பிரமதர் மோடி தலைமையில் அர்த்தமுள்ள வகையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனை உடனடியாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பிப்ரவரி 12ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

இதனை சிசிஜிஇடபிள்யூ (CCGEW) எனும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த கூட்டமைப்பு சார்பில் அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் 8வது ஊதியக் குழு விவகாரத்தில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால், பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+