ம்ஹூம், உக்ரைன் டூ பொருளாதார வீழ்ச்சி வரை கூட்டு முடிவுக்கு சாத்தியமியில்லை போல.. கப்சிப் மோடில் ஜி20
ஜி 20 கூட்டத்தில் இந்தியா சீனா எல்லை பிரச்னை குறித்து விரிவாக விவாதிக்கப்படும்
டெல்லி: ஜி 20 மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இதற்கு முன்னதாக ஜி 20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் மார்ச் 1 மற்றும் 2ம் தேதிகளில் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் உக்ரைன், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த விரிவாக பேசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஒரு கூட்டு முடிவு இக்கூட்டத்தில் எடுக்க முடியாது என்று சொல்லப்படுகிறது.
சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த பொருளாதாரத்தை கொண்ட நாடுகள் சார்பில் ஆண்டுதோறும் ஜி 20 மாநாடு நடைபெறும். இம்மாநாட்டை நடத்தும் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிடம் சுழற்சி முறையில் கொடுக்கப்படும். கடந்த ஆண்டு இம்மாநாட்டை இந்தோனேஷியா நடத்திய நிலையில், இந்த ஆண்டு இந்தியாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டிற்கு முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் சர்வதேச அளவில் பல முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது உக்ரைன் போர், ஐரோப்பிய நாடுகள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி, கால நிலை மாற்றம் உள்ளிட்டவை விவாதிக்கப்படும். இந்த கூட்டத்திற்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வருகை தந்துள்ள நிலையில் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் வரவில்லை.

ஜப்பான்
அந்நாட்டில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ளதால் இக்கூட்டத்திற்கு அவரால் வர முடியவில்லை என்றும், அவருக்கு பதில் இணை அமைச்சர் ஒருவர் இதில் பங்கேற்பதாகவும் ஜப்பான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த ஜி 20 கூட்டத்திலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளுடன் ஜப்பான் சேர்ந்து 'குவாட்' அமைப்பின் கூட்டத்தை போல ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காமல் விவாதங்களை மேற்கொள்ளும். இந்நிலையில், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் இக்கூட்டத்திற்கு ஆப்சென்ட் ஆகியிருப்பது குவாட் அமைப்பு நாடுகளுக்கு ஒரு கை குறைவது போல இருக்கிறது.

முதல் கூட்டம்
ஏற்கெனவே திட்டமிட்டபடி இன்று காலை ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் ரஷ்யாவின் செர்ஜி லாவ்ரோவ், சீனாவின் கின் கேங் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் ஒன்று கூடி முதல்கட்ட விவாதங்களை மேற்கொள்வார்கள். இதில் பன்முகத்தன்மை சீர்திருத்தங்கள், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்றவற்றுடன் சக நாடுகளுடன் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை குறித்து கலந்தாலோசனை நடத்தப்படும். இந்த முதல் அமர்வில் காலநிலை மாற்றத்திற்கு எதிராக இயற்கை சக்திகளை பயன்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது கூட்டம்
இதற்கடுத்து இரண்டாவது அமர்வு மதியம் நடைபெறுகிறது. இதில் பயங்கரவாத எதிர்ப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் குறித்து கலந்தாலோசிக்கப்படும். இதில் குறிப்பாக இந்தியாவுடனான எல்லை பிரச்னை குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதல் சம்பவங்களையடுத்து அருணாச்சலப் பிரதேச எல்லையிலும் மோதல் சம்பவங்கள் அதிகம் நடைபெற்றிருக்கிறது. எனவே நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டுவர இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

நிவாரணம்
அதேபோல உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டாலும், இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவுக்கு முழு ஆதரவு அளிக்கும் என்பதால் இது குறித்து உறுதியான எந்த நிலைப்பாடும் இக்கூட்டத்தில் எட்டப்படாது என்று சொல்லப்படுகிறது. அதேபோல பொருளாதார சீர்திருத்தம் குறித்து சீனா முன்வைக்கும் கோரிக்கைகளை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ளாது. எனவே இந்த கூட்டத்தில் கூட்டு முடிவு எதுவும் எட்டப்பட சாத்தியமில்லை.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications