குல்லா போட்டிருந்த முஸ்லீம்! ஓட ஓட விரட்டிய "கும்பல்".. தட்டு தடுமாறி! குர்கிராம் கலவரத்தில் கொடூரம்
டெல்லி: குர்கிராமில் நடக்கும் மத கலவரத்தில் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கட்டிடங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சாலைகளில் இஸ்லாமியர்கள் பலர் கடுமையாக தாக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) கான்ஸ்டபிள் சேத்தன் குமார் சௌத்ரி என்பவர் மகாராஷ்டிராவில் ஒரு ரயில்வே போலீஸ் அதிகாரி, 3 பயணிகளை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெய்ப்பூர்-மும்பை சென்ட்ரல் எக்ஸ்பிரஸில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. கான்ஸ்டபிள் சேத்தன் குமார் சௌத்ரி தனது மூத்த அதிகாரி RPF உதவி சப்-இன்ஸ்பெக்டர் டிகா ராம் மீனா என்பவரை முதலில் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

இவருக்கு மன ரீதியான பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில்தான் அவர் விடுமுறையில் இருந்து வந்து பணிக்கு சேர்ந்து உள்ளார். பணிக்கு சேர்ந்த முதல் நாளே அவர் தனது சீனியரை சுட்டுகொன்றுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் அவர் இஸ்லாமியர்களை தேடி தேடி சுட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. இஸ்லாமியர்கள் 3 பேர் இதில் கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சியே இஸ்லாமியர்களிடம் இருந்து விலகும் முன் அடுத்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று ஹரியானா மாநிலம் குர்கிராமில் நடந்து உள்ளது. குர்கிராமில் கடந்த திங்கள் கிழமை தொடங்கிய கலவரம் கடந்த 4 நாட்களாக விடாமல் நடந்து கொண்டு இருக்கிறது. அங்கே நு என்ற பகுதியில் தொடங்கிய கலவரம் தற்போது மற்ற பகுதிகளுக்கு பரவி உள்ளது.

கலவரம் எப்படி தொடங்கியது?: விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு பஜ்ரங் தள் அமைப்புடன் சேர்ந்து கடந்த திங்கள்கிழமை குர்கிராமில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதை குருகிராமில் உள்ள சிவில் லைன்ஸில் இருந்து பாஜக மாவட்டத் தலைவர் கார்கி கக்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் படையும் கொண்டு வரப்பட்டது. நல்ஹார் என்ற பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்வதே இந்த யாத்திரையின் நோக்கம்.
காலை தொடங்கிய யாத்திரையில் பிற்பகலில் கலவரம் ஏற்பட்டது. நு பகுதியில் உள்ள க்ஹெட்ல முட் என்ற பகுதிக்கு வரும் போது அங்கே இந்துக்கள் இஸ்லாமியர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது. அந்த பகுதிக்கு சென்றதும் இஸ்லாமியர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர், எங்கள் ஊர்வலத்தை அனுமதிக்கவில்லை, கற்களை வீசினர், இது இஸ்லாமிய ஏரியா என்று கூறி அனுமதிக்கவில்லை என்று இந்துக்கள் கூறுகின்றனர்.

இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர், அங்கே உள்ள இஸ்லாமியர்களை தாக்க முயன்றனர், நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசினர், அதேபோல் இஸ்லாமிய இளைஞரை மாட்டிறைச்சிக்காக கொண்ட மோனு மனேசர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார், இதுதான் கலவரத்திற்கு காரணம் என்று இஸ்லாமியர்கள் கூறுகின்றனர்.
தாக்குதல்: குர்கிராமில் நடக்கும் மத கலவரத்தில் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கட்டிடங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சாலைகளில் இஸ்லாமியர்கள் பலர் கடுமையாக தாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த கலவரத்தில் இஸ்லாமியர் ஒருவர் தாக்கப்படும் வீடியோ வெளியாகி உள்ளது.
State sponsored terrorism is on. It's horrific. pic.twitter.com/hLCGg0bZgn
— The Dalit Voice (@ambedkariteIND) August 3, 2023
ஒரு இஸ்லாமியரை சூழ்ந்து நின்று கலவர கும்பல் தாக்குகின்றனர். குல்லா அணிந்து தாடி வைத்திருக்கும் அந்த இஸ்லாமியரை பார்த்ததும் கலவர கும்பல் துரத்தி துரத்தி அவரை தாக்கி உள்ளனர். இதில் அந்த இஸ்லாமியர் தடுக்கி விழுந்த நிலையில் அவரை சரமாரியாக மிதித்து உள்ளனர். இதையடுத்து போலீசார் கலவர கும்பலை தடுக்க முயன்றுள்ளனர்.
ஆனால் போலீஸ் இருந்தும் கூட எந்த கவலையும் இன்றி கலவர கும்பல் அந்த இஸ்லாமியரை மிக கடுமையாக தொடர்ந்து தாக்கி உள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications