வசதியில் ஏழை.. இதயத்தால் பணக்காரர்.. யார் இந்த முதியவர்?.. வைரலாகும் வீடியோவை பாருங்க!
டெல்லி: இரக்கம் காட்டுதலே மனிதத்தின் சிறந்த வடிவம் என்ற சொலவடைக்கு ஏற்ப பிச்சைக்காரர் ஒருவர் தனது தட்டிலிருக்கும் உணவை தெரு நாய்களுக்கு பகிர்ந்தளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். அது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு வேளை உணவுக்கே திண்டாடும் மக்கள் அன்னதானத்தை எப்படி செய்வது?
அதிலும் பிச்சைக்காரர்களுக்கு உணவு கிடைப்பதே அபூர்வம். இதில் அவர்கள் எங்கிருந்து உணவை பகிர்வது? ஆனால் ஒரு வீடியோவில் பிச்சைக்காரர் ஒருவர் தனக்கு கிடைக்கும் உணவை தெருநாய்களுக்கு பகிர்ந்தளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கைகள்
அந்த வீடியோவில் இரு தட்டுகளில் ஏதோ கஞ்சி போன்று ஒரு திரவ உணவை இரு நாய்களுக்கு இரு கைகளால் அளிக்கிறார். அந்த நாய்கள் சாப்பிடும் வரை அவர் பொறுமையாக காத்திருக்கிறார். பின்னர் தனது கைகளால் வருடிவிடுகிறார். இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுனந்தா நந்தா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
|
வெகுளி
அவர் வசதியில் ஏழையாக இருந்தாலும் இதயத்தால் அவர் பணக்காரர் என்ற வரிகளுடன் அந்த அதிகாரி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்துவிட்டு தனக்கு மிஞ்சிதான் தானம் எனும் இந்த உலகில் இப்படியும் ஒரு முதியவர் இருக்கிறாரே என்கிறார்கள். இன்னும் சிலர் உணவை அளித்துவிட்டு தனக்கு உணவில்லை என்ற கவலையேதும் இல்லாமல் வெகுளி போல் உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.

முக்கியம்
இந்த வீடியோ போட்ட ஒரு மணி நேரத்தில் 4000 பேர் பார்வையிட்டு 1000 பேர் லைக்ஸ் போட்டுள்ளார்கள். ஏழைகளுக்கு சேவையளிக்க பணக்காரராக இருக்க வேண்டியது அவசியம் இல்லை. இதயத்தின் அளவு எவ்வளவு என்பதுதான் முக்கியம் என நெட்டிசன்கள் புகழ்ந்துள்ளார்கள்.

அர்த்தம்
ஒருவர் தனக்கு கிடைக்கும் உணவை பகிர்ந்தளிக்கும் போது அவர் முழுமையான உணவை உண்ணதாகவே அர்த்தம் என்கிறார் இந்த வலைஞர்.
"பணம் இருக்கும் மனிதரிடம்
மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம்
பணம் இருப்பதில்லை"....... என்ற சந்திரபாபுவின் புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications