வயதுக்கான ஆதாரமாக ஆதார் கார்டை பயன்படுத்த முடியுமா? உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒருவரின் வயதை தீர்மானிக்க ஆதார் அடையாள அட்டை ஒரு அதிகாரப்பூர்வ ஆவணம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 2015-ம் ஆண்டின், சிறார் நீதி சட்டத்தின் 94-வது பிரிவின்படி, பள்ளி சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி அடிப்படையில்தான் வயது தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆதார் கார்டு இப்போது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அரசின் நலத்திட்டங்கள், அரசின் சேவைகள் என எதற்கு விண்ணப்பித்தாலும் ஆதார் அடையாள ஆவணமே கேக்கப்படுகிறது. வங்கி கணக்கு துவங்க வேண்டும் எனறாலும் முதலில் ஆதார் எண்ணைத்தான் வங்கி அதிகாரிகள் கேட்கிறார்கள்.

aadhaar-is-no-authoritative-proof-document-to-confirm-date-of-birth-supreme-court

சிம்கார்டு வாங்குவது தொடங்கி பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் விவரம் தான் அடிப்படையாக கேக்கப்படுகிறது. இப்படி பல சேவைகளை பெற ஆதார் அவசியமாகியுள்ள நிலையில், இந்த ஆதார் கார்டை வைத்து ஒருவரின் வயதை தீர்மானிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி, கல்லூரியில் உள்ள டிசி-யில் இருக்கும் பிறந்த தேதி விவரமே வயதை கணக்கிடுவதற்கான முறையான ஆவணம் என்று உச்ச நீதிமனம் தீர்ப்பளித்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

கடந்த 2015 ஆம் ஆண்டு, ஹரியானா மாநிலம் ரோதக்கை சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு இழப்பீடு கோரி, ரோதக்கில் உள்ள மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு தீர்ப்பாயத்தில் அவருடைய குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். உயிரிழந்த நபரின் ஆதார் அடையாள அட்டையில் பிறந்த தேதி ஜனவரி 1, 1969 என்றும் பள்ளி இறுதி ஆண்டு சான்றிதழ் (டிசி)-ல் அக்டோபர் மாதம் 1970 என்று குறிபிட்ப்பட்டு இருந்தது.

பள்ளி சான்றிதழ் அடிப்படையில் அவருடைய வயது 45 என கணக்கிட்ட தீர்ப்பாயம், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 19,35,000 ரூபாய் இழப்பீடாக அளிக்க உத்தரவிட்டது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆதார் கார்டு அடிப்படையில் பார்த்தால் உயிரிழந்த நபரின் வயது 47 என்பதால் இழப்பீட்டு தொகையை 9,22,000 ஆக குறைத்தது.

பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு இந்த வழக்கி வியாழக்கிழமை தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பஞ்சாப்- ஹரியானா உயர் நீதிமன்ர உத்தரவை ரத்து செய்தது.

மேலும், தீர்ப்பின் நீதிபதிகள் கூறியதாவது:- 2015-ம் ஆண்டின், சிறார் நீதி சட்டம் 94-வது பிரிவின் படி பார்த்தால், பள்ளி சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி அடிப்படையில்தான் ஒருவரது வயது தீர்மானிக்கப்பட வேண்டும். ஆதார் அடையாள அட்டை வழங்கும் தனித்துவ அடையாள ஆணையம் கடந்த ஆண்டு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த சுற்றறிக்கையில் வெளியிட்ட தகவலின் படி, ஆதார் கார்டை அடையாளத்தை உறுதி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஒருவரின் பிறந்த தேதிக்கு ஆதார் ஆதாரமாக கருத முடியாது என்று கூறியுள்ளது. எனவே ஒருவரின் வயதை தீர்மானிக்க ஆதார் அடையாள அட்டை ஒரு ஆணவம் கிடையாது" என்று உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+