Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படியே இருந்தா கோமாவுக்கு போயிடுவாரு.. கெஜ்ரிவால் உடல் நிலை குறித்து ஆம் ஆத்மி கவலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், அவர் விரைவில் கோமாவுக்கு செல்லக்கூடும் எனவும் ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.

புதிய மதுபான கொள்கையை டெல்லியில் அமல்படுத்தியதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீனில் வெளிவருவதற்கு பெரும் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் அவரது உடல் நிலை குறித்து ஆம் ஆத்மி திஹார் சிறை நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது.

Arvind Kejriwal Delhi Liquor Policy Delhi

ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினரான சஞ்சய் சிங், "கெஜ்ரிவால் சிறைக்குச் சென்றதில் இருந்து 8.5 கிலோ எடை குறைந்திருக்கிறார். கைது செய்யப்பட்ட அன்று, அவரது எடை 70 கிலோவாக இருந்தது, அது தற்போது 61.5 கிலோவாக குறைந்திருக்கிறது. 5 முறை அவருடைய ரத்த சர்க்கரை அளவு 50 mg/dLக்கும் குறைவாக குறைந்திருக்கிறது. அவரைக் கொல்ல சதி நடக்கிறது. இதே நிலைமை நீடித்தால் அவர் விரைவில் கோமாவுக்கு போகலாம். கெஜ்ரிவாலின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்று பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இவரது குற்றச்சாட்டுக்கு சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. கெஜ்ரிவாலின் உடல் நிலை மற்ற கைதிகளை போலவே தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், மருத்துவ நிபுணர்களின் வழக்கமான மதிப்பீடுகளை அவர் பெற்று வருவதாகவும் சிறை நிர்வாகம் கூறியிருக்கிறது. சிறை எண் 2-ன் கண்காணிப்பாளர் அலுவலகம் மேலும் கூறியதாவது,

"அவரது எடை சிறிது குறைந்திருப்பது உண்மைதான். ஆனால் வேறு எந்த பாதிப்பும் அவருக்கு ஏற்படவில்லை. அவருக்கான நோய்க்கு உரிய மருந்தை அவர் பெற்று வருகிறார். ஜூன் 2 முதல் ஜூலை 14 வரை 63.5 கிலோவிலிருந்த 61.5 கிலோ வரை அவர் எடை குறைந்திருக்கிறார். எடை குறைவுக்கு குறைந்த அளவு உணவை மற்றும் குறைந்த கலோரிதான் காரணம். கெஜ்ரிவால் 24 மணி நேரமும் மூத்த மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையில் இருக்கிறார். எனவே தேவையற்ற வியூகங்கள் அவசியமற்றது" என்று கூறியுள்ளார்.

மேலும் ரத்த அளவு குறைந்தது குறித்து பேசிய அவர், "ரத்த சர்க்கரை அளவு மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ ஆலோசனைப்படி அவருக்கு மருந்தும் உணவும் வழங்கப்படுகிறது" என்று விளக்கமளித்துள்ளார்.

2021-2022ம் ஆண்டு டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சிபிஐக்கு பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது.

இந்த முறைகேடு மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் தனது பங்குக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இப்படியாக கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டது.

இடையில் லோக்சபா தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 10ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் 2ம் தேதி மாலை திகார் சிறையில் சரணடைந்தார். முன்னதாக தனது இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நியாய் பிந்து அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதி, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார். எனவே கடந்த 21ம் தேதி கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வர இருந்தார்.

ஆனால், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அதேபோல சிபிஐ-யும் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை, அங்கேயே வைத்து அதிரடியாக கைது செய்தது. இதனால் கெஜ்ரிவால் வெளியே வருவதில் தொடர் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் கடந்த 26ம்தேதி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜராகி சிபிஐ-ன் குற்றச்சாட்டுகளுக்கு கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+