நீங்க சொல்வது தப்பு.. பிரசாந்த் பூஷன் ட்வீட்டுக்கு ஆட்சேபம் சொன்ன ட்விட்டர்.. என்ன நடந்தது?
டெல்லி:மூத்த வழக்கறிஞரும், சமூக போராளியுமான பிரசாந்த் பூஷன் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவு தவறானது என்று டுவிட்டர், மார்க் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் நிர்வாகத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஏற்கனவே பூசல் இருந்து வருகிறது. சமீபத்தில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டர் கணக்கை சில நிமிடங்கள் முடக்கிவைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது டுவிட்டர் நிர்வாகம்.

இந்தநிலையில் பிரசாந்த் பூஷன் வெளியிட்ட ஒரு தகவலை தவறான தகவல் என்று குறிப்பிட்டுள்ளது ட்விட்டர்.
அவர் தனது ட்விட்டர் பதிவில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட 45 வயது பெண் 10 நாட்கள் கழித்து இறந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதை ட்விட்டர் தவறான தகவல் என்று குறிப்பிட்டதோடு பெரும்பாலான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி நன்மை பயக்கும் என்று சுகாதார அதிகாரிகள் கூறியதை கவனிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா, சமீபத்தில், கொரோனா விஷயத்தில் மத்திய அரசை நெருக்கடிக்கு உள்ளாக்க காங்கிரஸ் டூல்கிட் வெளியிட்டதாக தெரிவித்திருந்தது. இந்த டுவிட்டர் பதிவுக்கு இதே தவறான தகவல் என்று ட்விட்டர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications