உலகில் வாழ பிடிக்கவில்லை.. என் சாவுக்கு காரணம் அவர்தான்.. நடிகை அகான்ஷா துபேயின் கண்ணீர் வீடியோ
டெல்லி: நடிகை அகன்ஷா துபே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கண்ணீர் மல்க பேசியிருந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே. இவர் கடந்த மார்ச் 26ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஓட்டல் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது புதிய பாடல் யே ஆரா கபி ஹரா எனும் பாடல் வெளியானது. பாடல் வெளியீட்டிற்கு முன்னரோ அல்லது பின்னரோ அவர் எப்போது இறந்தார் என தெரியவில்லை, இறப்பதற்கு முதல் நாள் கூட நடிகை துபே ஒரு நடன வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில் கருப்பு நிற உடையில் அவர் துள்ளி குதித்து ஆடும் வீடியோவை அவரே தொலைபேசியை பிடித்துக் கொண்டு பதிவு செய்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மரணமடைந்தார் என்பதை அவருடைய ரசிகர்கள் ஏற்க மறுத்தனர். அவருக்கு இன்ஸ்டாவில் 1.7 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் துபேயின் தற்கொலை குறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் அகன்ஷா துபேயின் முன்னாள் காதலர் அமர்சிங் என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் அகன்ஷா துபே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பேசிய வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் அவர் மக்களுடன் நான் பேச போவது இதுதான் கடைசி. எனக்கு இந்த உடலில் இருக்க விரும்பவில்லை. எனது மரணத்திற்கு முன்னாள் காதலர் சமர்சிங்தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே சமர்சிங் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ நடிகர் சமர்சிங்கிற்கு எதிராக வலுவான ஆதாரமாக இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் இந்த வீடியோ உண்மையாகவே துபேயின் மரணத்திற்கு முன்பு எடுக்கப்பட்டதா அல்லது உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டதா என்பதை அறிய தடயவியல் சோதனைக்கு காவல் துறையினர் அனுப்பியுள்ளனர். சமர்சிங்குடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
அகன்ஷா துபே ஹோட்டல் சோமேந்திரா ரெசிடென்சியில் நள்ளிரவில் ஒரு நபருடன் ஹோட்டலுக்குள் நுழைவதும் அதன் பின்னர் அந்த நபர் நடிகை துபேயை அவருடைய அறைக்கு அழைத்து செல்வதையும் சிசிடிவி காட்சிகளில் தெளிவாக காட்டியிருந்தது. இருவரும் அறையில் 17 நிமிடங்கள் பேசி கொண்டனர்.
ஹோட்டலுக்கு அகான்ஷாவும் அந்த நபரும் நள்ளிரவு 1.30 மணிக்கு வந்தடைந்தனர். அந்த நபர் ஹோட்டலை விட்டு வெளியேறிய சில நிமிடங்களுக்கு பிறகு அகான்ஷா இன்ஸ்டாகிராமில் கண்ணீருடன் காணப்பட்ட வீடியோ வெளியானதாக சொல்லப்படுகிறது. அடுத்த நாள் நடிகை துபே நீண்ட நேரமாகியும் வெளியே வராத நிலையில் மாற்று சாவியை போட்டு திறந்து பார்த்த போது அவர் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications