குறைந்த கட்டணத்தில் சுகாதாரக் கல்வி.. சிறப்பு மையத்தை திறக்கும் அதானி குழுமம்!
டெல்லி: அதானி அறக்கட்டளை, குறைந்த கட்டணத்தில் சுகாதாரக் கல்வியை வழங்குவதற்கான சிறப்பு மையத்தை (Centre of Excellence) உருவாக்க DMIHER நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த முயற்சியானது கல்வித்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதையும், சமூக சுகாதார அணுகலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதானி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சிறப்பு மையம்: அதானி அறக்கட்டளை - DMIHER கூட்டு
அதானி அறக்கட்டளை மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகமான, 'தத்தா மேகே இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச்' ஆகியவை இணைந்து இந்த சிறப்பு மையத்தை உருவாக்க இருக்கின்றன. "சேவையே பிரதானம்" என்ற தத்துவத்தின் அடிப்படையில், தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று அதானிக் குழுமம் கூறியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் புதுமையான அணுகுமுறை, சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி மற்றும் சுகாதாரத்தில் கவனம்
இந்த மையத்தில் 15 துறைகளில், இளங்கலை, முதுகலை மற்றும் உயர் சிறப்புப் படிப்புகள் உட்பட 217 வகையான கல்வித் திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. அதானி குழுமத்தின் "Temple of Healthcare" என்ற கருத்தின் அடிப்படையில், சேவை மற்றும் கருணை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த மையங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மையம் மூலம், குறைந்த கட்டணத்தில், உயர்தரக் கல்வியை வழங்குவதே இந்த அறக்கட்டளையின் நோக்கம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வாய்ப்புகள் குறைவாக உள்ள இடங்களில் சேவை செய்வதே அதானி அறக்கட்டளையின் முக்கிய குறிக்கோள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதானி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர். பிரணவ் அதானி இது குறித்து கூறுகையில், "இந்த கூட்டு முயற்சி எங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு. இது புதுமை மற்றும் அக்கறையின் அடையாளமாக இருக்கும். நாம் 2047-க்குள் 'விக்ஸித் பாரத்' (வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைய முடியும்" என்று கூறியுள்ளார்.
DMIHER-ன் நிறுவனரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தத்தா மேகே கூறுகையில், "இந்த கூட்டு முயற்சி, சுகாதாரக் கல்வியை மேம்படுத்தும். கடந்த 35 ஆண்டுகளாக, DMIHER ஒரு தன்னிறைவு பெற்ற நிறுவனமாக வளர்ந்துள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்களிப்பாக இருக்கும். 2047-க்குள் 'விக்ஸித் பாரத்' என்ற இலக்கை அடைய இது ஒரு முக்கியமான படி" என்றார்.
இந்த கூட்டு முயற்சியின் மூலம், சுகாதாரக் கல்வி மற்றும் சமூக நலனில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உயர்தர மருத்துவக் கல்வி சென்று சேரும் என்று சொல்லப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications