இந்தியாவில் ஹெலிகாப்டர் உற்பத்தி.. அதானி- லியோனார்டோ இடையே உருவான முக்கியமான பார்ட்னர்ஷிப்
டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு தற்சார்பை வலுப்படுத்தும் நோக்கில், அதானி டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ், லியோனார்டோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஹெலிகாப்டர் உற்பத்தி எகோசிஸ்டத்தை உருவாக்க பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.. பாதுகாப்புத் தற்சார்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கம். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 3ம் தேதி கையெழுத்தானது.
இந்த பார்ட்னர்ஷிப் மூலம், இந்திய ஆயுதப் படைகளின் தேவைகளுக்கு ஹெலிகாப்டர்களை இந்தியாவில் வடிவமைத்து, தயாரித்து, பராமரிக்க முடியும். நாட்டுமயமாக்கல், பழுதுபார்ப்பு வசதிகள், விமானி பயிற்சிகளில் கவனம் செலுத்தி, இந்தியாவை உலகளாவிய ஹெலிகாப்டர் மையமாக நிலைநிறுத்தும்.

அதானி
லியோனார்டோவின் AW169M மற்றும் AW109 ட்ரெக்கர்எம் ஹெலிகாப்டர்களுக்கான ராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இதன் முதன்மை நோக்கம். இதன் மூலம் படிப்படியான உள்நாட்டிலேயே விமானத்தை உற்பத்தி செய்வது, பராமரிப்பு மையங்கள், விமானிப் பயிற்சித் திறன்களை நாட்டிலேயே உருவாகும்.
அதானி டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் உற்பத்தித் திறன்களைப் பயன்படுத்தும்.. லியோனார்டோ ஹெலிகாப்டர் வடிவமைப்பு நிபுணத்துவத்தை வழங்கும். இத்திட்டம் மத்திய அரசின் 'ஆத்மநிர்பர் பாரத்' இலக்குடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்தும்.
ஏன் முக்கியம்
ராணுவ பயன்பாடு மட்டுமின்றி, உள்நாட்டு சிவில் போக்குவரத்து மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலிகளில் இந்தியாவும் இணைக்கப்படும். பொறியியல், உற்பத்தி, தளவாடங்கள் போன்ற துறைகளில் ஆயிரக்கணக்கான உயர் திறன் கொண்ட வேலைவாய்ப்புகளையும் இந்த ஒப்பந்தம் மூலம் உருவாக்கும்.
இது தொடர்பாக அதானி டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் இயக்குநர் ஜீத் அதானி கூறுகையில், "லியோனார்டோவுடனான இந்த பார்ட்னர்ஷிப் மூலம் எதிர்காலத்தில் இந்தியாவிலேயே ஹெலிகாப்டர்களை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தும். மேலும், இதன் மூலம் உயர் திறன் கொண்ட வேலைவாய்ப்புகளும் நீண்டகாலத் தொழிற்துறை வளர்ச்சியும் அதிகரிக்கும்" என்று தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் தேவை
இது தொடர்பாக அதானி டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் தலைமைச் செயல் அதிகாரி ஆஷிஷ் ராஜ்வன்ஷி கூறுகையில், "அடுத்த பத்தாண்டுகளில் இந்திய ஆயுதப் படைகளுக்கு 1,000க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் தேவை. இந்த பார்ட்னர்ஷிப் உள்நாட்டுமயமாக்கலை வேகப்படுத்தி, உள்நாட்டு விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும்" என்றார்.
லியோனார்டோ ஹெலிகாப்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ஜியான் பியரோ குட்டிலோ இது குறித்து கூறுகையில், "இந்தியாவின் வளர்ந்து வரும் ரோட்டோகிராஃப்ட் தொழிலுக்குப் பங்களிப்பதிலும், நவீன ஹெலிகாப்டர் தொழில்நுட்பங்களை அணுக ஆதரவளிப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று குறிப்பிட்டார்.
இந்த பார்ட்னர்ஷிப், இந்தியாவின் விண்வெளித் துறையை மறுவரையறை செய்வதிலும், பாதுகாப்புத் தன்னாட்சியை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றும். உலக ஹெலிகாப்டர் உற்பத்தி மையமாக இந்தியாவின் நிலையை இது மேம்படுத்தும்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications