"பிரதமரின் தொலைநோக்கு பார்வையில்.. இந்தியா வெற்றி நடை போடுகிறது!" புகழ்ந்து தள்ளிய ஓ பி ரவீந்திரநாத்
டெல்லி: மக்களவையில் மத்திய பாஜக அரசின் திட்டங்களைப் புகழ்ந்து பேசிய அதிமுக எம்பி ஓ.பி.ரவீந்திரநாத், இந்தியாவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் மற்றும் திமுக என்ன செய்துள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 31ஆம் தேதி குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பிப்.1ஆம் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே மத்திய அரசின் திட்டங்களை மக்களவையில் பாராட்டிப் பேசிய அதிமுகவின் தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார், காங்கிரஸ் - திமுக இயக்கங்கள் நாட்டிற்கு என்ன செய்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓ.பி.ரவீந்திரநாத் பேச்சு
நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் பேசிய தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத், "நமது புனிதமான தாய் திருநாடு ஆன்மிகமும் தத்துவமும் தழைத்த நாடு. தற்போது நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தி வருகிறார். நாம் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3ஆம் ஆண்டில் உள்ளோம். ஆனால் அதே நேரம் நமது நாடு 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடி வருகிறோம். நமது நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகளையும் வீரர்களையும் நான் இந்த நேரத்தில் தலைவணங்கி மரியாதையுடன் வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்திய அரசுத் திட்டங்கள்
குடியரசுத் தலைவர் உரையில், அடுத்த 25 வருடத்தில் இந்தியா அடைய உள்ள வளர்ச்சி மற்றும் மக்களின் முன்னேற்றம் உலக அரங்கில் இந்தியாவை வலுவான ஒரு நாடாக மாற்றும் எனக் கூறியிருந்தார். அதை நான் வரவேற்கிறேன். 180 மேற்பட்ட நாடுகள் நமது நாட்டின் மருந்துகளைப் பயன்படுத்துவது என்பது நம் நாட்டின் மருத்துவத் துறையின் ஒரு புரட்சி ஆகும். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதியார்! அதன்படி பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 19 மாதங்களில் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்க்கு எதிராக ஒரே ஆண்டில் 150 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். நாட்டு மக்களின் மருத்துவத் தேவைக்காக 24 ஆயிரம் கோடி மதிப்பில் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலமாக 80,000 சுகாதார வளாகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன்
கோடிக்கணக்கான ஏழைகள் பயன்பெறும் வகையில் மருத்துவ சேவைகள் பெறுவதற்காக ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கியதைப் பாராட்டுகிறேன். ஜல் ஜீவன் திட்டத்தின் மூலமாக பல கோடி கிராம மக்களுக்குக் குடிநீர் இணைப்பு குழாய்கள் வழங்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். இந்திய அரசு கோதுமையையும் நெல்லையும் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது. இதன்மூலம் விவசாயிகள் நேரடியாகப் பயன்பெற்றுள்ளனர். அதேபோல விவசாயிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உதவித்தொகையும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 90 ஆயிரம் கிலோ மீட்டராக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் இப்போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டது.

திமுக - காங்கிரஸ்
நமது நாட்டின் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளது. இப்படி இவ்வளவு சாதனைகளை இந்த அரசு புரிந்துள்ளது ஆனால் இதற்கு முன்பு இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் திமுகவைச் சேர்ந்த இயக்கங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். அவர்கள் எமர்ஜென்சி காலத்தில் மாற்றிவிட்டார்கள். தேர்தல் காலங்களில் பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தேவையில்லாத கதைகளைப் பேசி மக்களைத் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் நம்பத் தயாராக இல்லை
இந்த இயக்கங்கள் தங்கள் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சிக்கு என்ன செய்தது என்பதை இன்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களுடைய பேச்சுகளை இனியும் இந்திய மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. ஆனால் நமது பாரதப் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை நாளும் சரி திட்டங்களிலும் நமது இந்தியா வளர்ச்சியை நோக்கி வெற்றி நடை போடுகிறது. அதை உணர்த்தும் வகையில் குடியரசுத் தலைவர் உரை அமைந்துள்ளது" என்று அவர் பேசினார்
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications