Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனாவுக்கு பின்.. இளைஞர்களிடையே அதிகரிக்கும் மாரடைப்பு? வெளிப்படையாக பேசிய மன்சுக் மாண்டவியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டில் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இது குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்போது நாம் புது புது பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறோம். முன்பு அரிதாக இருந்த நோய்ப் பாதிப்புகள் கூட இப்போது பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது.

முன்பெல்லாம் மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மத்தியில் தான் அதிகம் ஏற்படும். ஆனால், இப்போது இளைஞர்கள் அவ்வளவு ஏன் குழந்தைகள் மத்தியில் கூட இது அதிகமாக ஏற்பட ஆரம்பித்துள்ளது.

 After Coronavirus Cardiac arrest are being reported in young people says Mansukh Mandaviya

மாரடைப்பு: அதிலும் கொரோனா பரவலுக்குப் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல இடங்களில் டான்ஸ் ஆடும் போது, உடற்பயிற்சி செய்யும் போதெல்லாம் மாரடைப்பு ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்த பல ஷாக் சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். அதிலும் இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் 30 வயதுக்கு கீழ் இருக்கும் இளைஞர்கள் தான். இதுவே அனைவரையும் கவலையடைய வைத்தது.

இதற்கிடையே மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இது தொடர்பாக நாடாளுமன்றத்திலேயே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலுக்குப் பிறகு இளைஞர்களிடையே மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், இருப்பினும் இதை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மன்சுக் மாண்டவியா: இது தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மன்சுக் மாண்டவியா, கொரோனாவுக்கும் மாரடைப்பு வழக்குகளும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூன்று ஆய்வுகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 18 முதல் 45 வயதானவர்களுக்கு ஏற்படும் திடீர் மரணங்கள் தொடர்பாக சுமார் 40 மருத்துவமனைகளில் ஆய்வு நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்வுகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய மேலும் 30 மருத்துவமனைகளில் ஆய்வு நடந்து வருகிறது. இவை தவிர, திடீர் மாரடைப்பால் உயிரிழந்த இளைஞர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்து மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறியவும் மற்றொரு ஆய்வு நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

 After Coronavirus Cardiac arrest are being reported in young people says Mansukh Mandaviya

தேவையான நடவடிக்கை: அவர் மேலும் கூறுகையில், "இதய நோய் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் NP-NCD அமைப்புடன் இணைந்து பல்வேறு மாநிலங்களும் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்குகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் 724 மாவட்டங்களில் கிளினிக்குகள், 210 மாவட்டங்களில் இதய சிகிச்சைப் பிரிவுகள், 326 மாவட்ட பராமரிப்பு மையங்கள் மற்றும் 6,110 சமூக சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இதய நோய் நோயாளிகள் மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ் போன்ற மத்திய நிறுவனங்கள், மத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் எனப் பல இடங்களில் சிகிச்சை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

காப்பீடு: பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தின் கீழ் சிகிச்சையை எளிதாக்க ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ₹ 5 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 60 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு இந்தக் காப்பீடு கிடைக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.

முன்பு கொரோனாவுக்கும் பிறகு அதிகரிக்கும் மாரடைப்பிற்கும் தொடர்பான கேள்விக்கு மத்திய அரசு தங்களிடம் தரவுகள் இல்லை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது இது குறித்த ஆய்வுகள் நடந்து வரும் நிலையில், விரைவில் இதில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+