அக்னிபாத் போராட்டம்.. இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் முப்படை தளபதிகள்.. முக்கிய ஆலோசனை
டெல்லி: அக்னிபாத் போராட்டத்திற்கு இடையில் முப்படை தளபதிகள் இன்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
நாடு முழுக்க பல்வேறு இடங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று பாரத் பந்த் நாடு முழுக்க கடைபிடிக்கப்பட்டது. பந்திற்கு இடையில் பல்வேறு இடங்களில் மோதல்கள், போராட்டங்கள் நடைபெற்றன.
தமிழ்நாட்டில் இந்த பந்த் பெரிய அளவில் கடைபிடிக்கப்படவில்லை என்றாலும் வடமாநிலங்களில் தீவிரமாக பந்த் பின்பற்றப்பட்டது.

போராட்டம் கைது
நேற்று பந்திற்கு இடையில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் கைது செய்யப்பட்டனர். பீகாரில் பல்வேறு இடங்களில் போராட்டம் செய்த 40 பேர் வரை கைது செய்யப்பட்டனர். மத்திய பிரதேசத்தில் வாட்ஸ் ஆப் குரூப் மூலம் போராட்டத்திற்கு திட்டங்களை மேற்கொண்ட 4 பேர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். நொய்டாவில் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

முப்படை தளபதிகள்
அக்னிபாத் போராட்டத்திற்கு இடையில் முப்படை தளபதிகள் இன்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு எதிராக முப்படை தளபதிகள் தனி தனியாக சமீபத்தில் கருத்து தெரிவித்தனர். இந்த போராட்டம் தவறான நோக்கத்தோடு நடத்தப்படுகிறது. இந்த போராட்டங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ராணுவத்தில் வாய்ப்பு அளிக்கப்படாது. ராணுவத்திற்கு ஒழுக்கம் முக்கியம். போராட்டம் செய்யும் நபர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை என்று முப்படை தளபதிகள் குறிப்பிட்டனர்.

இன்று சந்திப்பு
போராட்டம் நாடு முழுக்க வலுத்து வரும் நிலையில் பிரதமர் மோடியை முப்படை தளபதிகள் சந்திக்கிறார்கள். அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னிவீர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
Recommended Video

போராட்டம்
அதே சமயம் இவர்களுக்கு பென்ஷன் இல்லை. அதேபோல் 25 சதவிகிதம் பேர் மட்டுமே இதில் நிரந்தர பணியாளர்களாக தேர்வாவார்கள். அதனால் 4 வருடம் வேலை பார்த்தும் புண்ணியம் இல்லை. எனவே இந்த திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் அதிக அளவில் போராடி வருகிறார்கள். இதில் வருமானம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். 4 வருடத்திற்கு பின் என்ன வேலை கிடைக்கும் என்று கேள்வியை தொடர்ந்து இளைஞர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications