அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இன்று பந்த்! நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு! குவிக்கப்பட்ட போலீஸ்
டெல்லி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பந்த் நடக்க உள்ள நிலையில் நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அக்னிபாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னி வீர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். இதற்கான திட்டத்தை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்திய ராணுவத்தில் இளமையான வீரர்கள் இருக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

போராட்டம்
இந்த நிலையில்தான் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மிக தீவிரமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தில் 4 வருடம் பணியாற்றிய பின் 11.7 லட்சம் ரூபாய் பணம் வழங்கப்படும். ஆனால் இதில் பென்சன் கிடையாது. அதேபோல் 25 சதவிகிதம் பேர் தான் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்து வருகிறார்கள்.

பந்த்
இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க இன்று பந்த் நடத்த போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பந்த காரணமாக கேரளாவில் மொத்த போலீஸ் படையும் சாலைகளில் குவிக்கப்பட்டு ரோந்து மேற்கொள்கிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையில் இறங்கி போராட்டம் செய்யும் நபர்கள் உடனுக்குடன் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு
அதேபோல் உத்தர பிரதேசங்களில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள் முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்கள் இன்று கூட்டமாக வரும் இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு அரசு அலுவலகங்கள் முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பீகாரில் அக்னிபாத் போராட்டம் காரணமாக ரயில் நிலையங்கள் கடுமையாக சேதம் அடைந்தன.

பீகார்
இதையடுத்து பீகாரில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளனர். இந்த போராட்டத்திற்கு எதிராக பீகாரில் மட்டும் 60 ரயில்கள் பெட்டிகளில் தீ வைக்கப்பட்டு உள்ளன. 10 ரயில் என்ஜின்கள் மொத்தமாக தீக்கிரையாகி உள்ளன. அதேபோல் 10 ரயில் நிலையங்கள் பீகாரில் மட்டும் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளன. இந்த போராட்டத்திற்கு இடையில் பீகாரில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது.

வடஇந்தியா
இதனால் பீகாரில் துணை முதல்வர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் என பா.ஜ.க. தலைவர்கள் 10 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது போக ஜார்கண்ட் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பந்த் காரணமாக விடுமுறை விடப்பட்டு உள்ளது.
பீகாரில் 20 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.டெல்லி, ஹரியானாவில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வடமாநிலங்களில் கடைகள் திறக்கப்படாத நிலையில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications