"அக்னிபாத் திட்டம் வேண்டாமே!" கூட்டணிக்கு உள்ளேயே திடீரென எழுந்த எதிர்ப்பு.. பாஜகவுக்கு சிக்கல்?
டெல்லி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில், முதல்முறையாக பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
மத்திய அரசின் ராணுவங்களுக்கு ஆள் சேர்க்கும் புதிய அக்னிபாத் திட்டத்தைச் சமீபத்தில் அறிவித்து இருந்தது. இத்திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் வரை இளைஞர்கள் ராணுவத்தில் பணிபுரிவார்கள்.
இதில் 17.5 வயது முதல் 21 வயதுக்குள் உள்ளவர்கள் சேரலாம். இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணைபவர்கள் அக்னிவீர் என அழைக்கப்படுவார்கள்.

அக்னிபாத்
ஒவ்வொரு வீரரும் 4 ஆண்டுகள் பணி செய்யலாம் என்ற நிலையில், பணிக்காலம் முடிந்ததும் 80% பேர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவர். 20% மட்டும் பேர் ராணுவப் பணியைத் தொடர முடியும். நாட்டின் பாதுகாப்புப் படைகளின் செலவின குறைப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அக்னிபாத் திட்டம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் ராணுவ செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டம்
இருப்பினும், இத்திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்து உள்ளனர். பல்வேறு இடங்களில் போராட்டம் வலுவடைந்து வருகிறது. பீகார், தெலங்கானா மாநிலங்களில் ரயில் நிலையங்களுக்கும் கூட தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்கள் மட்டுமின்றி தென்மாநிலங்களுக்கும் இந்தப் போராட்டம் மெல்லப் பரவி வருகிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு இதுவரை எதிர்ப்பு தெரிவித்த நிலையி், இப்போது பாஜக கூட்டணிக் கட்சி ஒன்றும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கூட்டணிக்குள் எதிர்ப்பு
இந்த அக்னிபாத் திட்டத்திற்குப் பீகாரில் பாஜக உடன் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தப் புதிய கொள்கை, பீகார் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது குறித்து ஜேடியு தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் அக்கட்சி சார்பில் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

விமர்சனம்
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "அக்னிபத் திட்டம் காரணமாக, பீகார் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மனதில் அதிருப்தி, விரக்தி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் காரணமா அச்சம் ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஏனெனில் இது நாட்டின் பாதுகாப்பு உடன் தொடர்புடையது" என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு கூட்டணிக் கட்சி
அதேபோல பாஜகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா அமைப்பும் இந்தத் திட்டத்தை விமர்சித்துள்ளது. இதைத் தேசத்திற்கு ஆபத்தான திட்டம் என்பதால் இதைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் அவாம் கூறுகையில், "அக்னிபத் திட்டம் நாட்டிற்கும், இளைஞர்களுக்கும் ஆபத்தானது, எனவே உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். பழைய முறையைப் பின்பற்றுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்,
-
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு












Click it and Unblock the Notifications