அக்னிபாத் திட்டம்! பீகார் மட்டுமல்ல, பல வட மாநிலங்களிலும் போராட்டம் பரவுகிறது.. அதிகரிக்கும் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டம், இப்போது அரியானா மாநிலத்திற்கும் பரவி உள்ளது.

Recommended Video

    Agnipath-க்கு எதிராக ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் போராட்டம் - வீடியோ

    இந்தியாவில் இப்போது முப்படைகளுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே மத்திய அரசின் புதிய ராணுவ ஆட்சேர்பு கொள்கையான அக்னிபாத் திட்டத்தைச் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

    இத்திட்டத்தில் ராணுவம், கடற்படை, விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு நடைபெறும். 17.5 வயது முதல் 21 வயதுக்குள் உள்ளவர்கள் இதில் சேரலாம்.

     அக்னிபாத்

    அக்னிபாத்

    இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணைபவர்கள் அக்னிவீர் என அழைக்கப்படுவார்கள். இத்திட்டத்தில் ஒவ்வொரு வீரரும் 4 ஆண்டுகள் பணி செய்யலாம். பணிக்காலம் முடிந்ததும் 80% பேர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவர். 20% மட்டும் பேர் ராணுவப் பணியைத் தொடர முடியும். இத்திட்டத்தில் முதலாம் ஆண்டு ரூ.21,000 வழங்கப்படும் நிலையில், அது படிப்படியாக உயர்த்தப்பட்டு 4ஆம் ஆண்டில் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.

     போராட்டம்

    போராட்டம்

    நாட்டின் பாதுகாப்புப் படைகளின் செலவின குறைப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அக்னிபாத் திட்டம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் ராணுவ செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்தப் புதிய திட்டத்தை ஒரு தரப்பினர் வரவேற்றாலும் மற்றொரு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டங்களும் தொடங்கி உள்ளன,

     போலீஸி அதிகாரி

    போலீஸி அதிகாரி

    இந்தப் போராட்டம் பல்வேறு இடங்களிலும் வன்முறையாகவும் மாறி உள்ளது. பீகாரில் பாஜக அலுவலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அதேபோல ஹரியானாவிலும் இப்போது போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது. ஹரியானாவின் பல்வால் நகரை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், துணை கமிஷ்னர் அலுவலகம் மற்றும் அங்கிருந்த குடியிருப்புகளைத் தாக்கினர். போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய வன்முறை கும்பல், போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்தது. இதில் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

     தீ வைப்பு

    தீ வைப்பு

    இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். அதன் பின்னரும் நிலைமை கட்டுக்குள் வராததால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். அதன் பின்னரும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. இந்த வன்முறையில் அரசு வாகனங்களைச் சேதப்படுத்தியதோடு ஐந்து போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன.

     துப்பாக்கிச்சூடு

    துப்பாக்கிச்சூடு

    ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் டிசி அலுவலகத்திற்குப் பேரணியாக வந்து கற்களை வீசத் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். அப்போது அங்குக் களமிறங்கிய போலீசார், நிலைமையைச் சமாளிக்க முயன்றனர். இதன் காரணமாக அந்த இடமே போராட்ட களமானது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி போலீசார், துப்பாக்கியால் சுடும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி உள்ளது. இதேபோல பீகார், ராஜஸ்தான், அரியானா மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

    பீகார்

    பீகார்

    அதேபோல பீகார் மாவட்டத்தில் போராட்டத்தில் குதித்து உள்ளனர். போராட்டத்தின் ஒரு பகுதியாகப் பீகாரின் நவாடா மாவட்டத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்திற்கு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது. அட்டாவா சாலையில் அமைந்துள்ள பாஜக கட்சி அலுவலகத்திற்குள் டயர்கள் எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+