5 நிமிஷம் ஆக்சிஜன் கட்.. திணறியே உயிரிழந்த 22 பேர்.. ஆஸ்பத்திரிக்கு சீல்.. ஓனரை தட்டி தூக்கிய போலீஸ்
ஆக்ரா மருத்துவமனை ஓனர் கைதாகி உள்ளார்
டெல்லி: நோயாளிகளுக்கான ஆக்சிஜனை 5 நிமிடம் நிறுத்தியதில், 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. இதனையடுத்து அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஆக்ராவில் பராஸ் என்ற ஆஸ்பத்திரியின் ஓனர் ஜெயின் பேசும் ஒரு ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது...
"சொல்ல முடியாத அளவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது... நோயாளிகளை கூட்டிட்டு போய்டுங்க என்று மக்களை கேட்டுக்கொண்டோம்.. ஆனால், யாருமே வந்து கூட்டிட்டு போகல. அதனால், நானே ஒரு ஐடியா செய்தேன்..

ஆடியோ
ஆக்சிஜன் இல்லாவிட்டால் யாரெல்லாம் இறந்துவிடுவார்கள்.. யாரெல்லாம் பிழைப்பார்கள் என்று டெஸ்ட் செய்ய முடிவெடுததேன்.. அதனால், ஏப்ரல் 26-ம்தேதி காலை 7 மணிக்கு 5 நிமிஷம் ஆக்சிஜன் சப்ளையை கட் பண்ணினோம்... இதை பற்றி யாருக்குமே வெளியில் தெரியாது.. உடனே 22 நோயாளிகளுக்கு மூச்சு திணற தொடங்கியது.. அவங்க உடம்பெல்லாம் நீல நிறமாக மாற ஆரம்பித்தது..

அதிர்ச்சி
இதை பார்த்ததும், எப்படியோ பிழைக்க மாட்டாங்கன்னு முடிவு செய்தோம்.. அதனால் மற்றவர்களை சொந்தமாகவே ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்து வருமாறு சொன்னோம்" என்று அந்த ஆடியோவில் உள்ளது. இந்த ஆடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி, பொதுமக்களுக்கு தூக்கி வாரிப்போட்டது..

ஆடியோ
ஆனால், ஜெயின் இதை பற்றி சொல்லும்போது, "அந்த ஆடியோவில் பேசியது நான்தான்.. அதை மறுக்கவில்லை.. ஆனால் நான் பேசியது தப்பாக திரிக்கப்பட்டுள்ளது.. அபாயத்தில் உள்ள நோயாளிகள் யார் என்று கண்டறிந்து அவங்களை பிழைக்க வைக்கவே, நாங்க இப்படி ஒரு செயலை செய்தோம்.. இதுவரை 7 நோயாளிகள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 22 பேர் உயிரிழக்கவில்லை" என்றார்.

விசாரணை
22 நோயாளிகள் இறந்தார்களா, இல்லையா என்று சரியாக தெரியாது என்று மழுப்பலாக ஜெயின் கூறியிருந்தார்.. ஆனால் உயிருக்கு அபோராடிய 22 நோயாளிகளும் உயிரிழந்ததாகவே கூறப்படுகிறது.. இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியை சீல் வைத்து மூட அரசு உத்தரவிட்டுள்ளது.. மேலும் அங்கிருந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளது.. ஆனால், நோயாளிகள் யாரும் இந்த பரிசோதனையால் உயிரிழக்கவில்லை என்று மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தி உள்ளது. 22 பேரின் உயிரிழப்புக்கு காரணமான ஆஸ்பத்திரி ஓனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications