எல்லாம் ரெடி.. இன்னும் சில நாட்களில் வெளியாகிறதா லோக்சபா தேர்தல் தேதி? தலைமை தேர்தல் ஆணையர் சூசகம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்களவை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது எனவும் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டது எனவும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இதன் மூலம், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தலும் நடைபெற உள்ளது. ஒடிசா, ஹரியானா, ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற பொதுத் தேர்தலும் நடத்தப்பட உள்ளது.

Ahead of Lok sabha Polls, Chief Election Commissioner Rajiv Kumar Says EC Fully Prepared

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையமும் தேர்தல் தொடர்பான பணிகளை விரைவுபடுத்தி உள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. இந்தியாவில் 96.88 கோடி வாக்காளர்கள் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் ஆணையம் தயார்: நாடு முழுவதும் வரும் லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில் 2024 லோக்சபா தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகவும், அனைத்து ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தல் நடத்துவவது குறித்துப் பேசிய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "50 சதவீத வாக்குச்சாவடிகளுக்கு மேல் 'வெப் காஸ்டிங்' வசதி இருக்கும். 37,809 ஓட்டுச்சாவடிகளில், 22,685 ஓட்டுச்சாவடிகளில், 'வெப்காஸ்டிங்' ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச் செலுத்தும் மையங்களில் மாற்றுத்திறனாளிகள், முதல் முறை வாக்கு செலுத்தும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் முக்கிய கவனம் செலுத்தப்படுவார்கள். மேலும் 300 வாக்குச்சாவடிகள் மாற்றுத்திறனாளி அதிகாரிகள் நிர்வகிப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.

இன்னும் சில நாட்களில்: லோக்சபா தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகவும், அனைத்து ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளதன் மூலம் இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப் படக்கூடும் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை தேர்தல்கள் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு மே 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+