குழந்தைகளுக்கு மங்கி பாக்ஸ் ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து! கொரோனாவை விட மோசமாம்! எச்சரிக்கும் எய்ம்ஸ்
டெல்லி: இந்தியாவில் குரங்கு அம்மை பரவ தொடங்கி உள்ள நிலையில், இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை முக்கிய எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளது.
கொரோனாவே இன்னும் முடியாத சூழலில் இப்போது மங்கி பாக்ஸ் பாதிப்பு உலகில் பல நாடுகளிலும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் பல நாடுகளில் இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு பரவி வருகிறது. இதுவரை பல நூறு பேருக்கு இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தெரியவில்லை
இந்த மங்கி பாக்ஸ் கோவிட்-19 பெருந்தொற்றை போல புதிய வைரஸ் இல்லை. ஏற்கனவே இவை ஆப்பிரிக்க நாடுகளில் என்டமிக்காகவே இருந்து வருகிறது. இருப்பினும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெளியே இந்த வைரஸ் பரவுவது இதுவே முதல்முறையாகும். முன்னெப்போதும் இல்லாதது போல இப்போது ஏன் இந்த வைரஸ் இப்படிப் பரவுகிறது என்பது குறித்து ஆய்வாளர்களுக்கே தெளிவாகத் தெரியவில்லை..

கேரளா
இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படாமலேயே இருந்தது. இந்தச் சூழலில், கேரளாவில் சமீபத்தில் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் உறுதியானது. அவர் ஐக்கிய அமீரகத்தில் இருந்து வந்தவர் என்றும் அங்கு அவர் நெருங்கிய தொடர்பில் இருந்தவருக்கு மங்கி பாக்ஸ் இருந்தது என்றும் கூறப்பட்டது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வருவோரைக் கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், குரங்கு அம்மை குறித்து எய்ம்ஸ் மருத்துவர் முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.

ஆபத்தானது
தென்கிழக்கு ஆசியாவில் பிராந்தியத்தில் குரங்கு அம்மை கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவத் துறை பேராசிரியர் பியூஷ் ரஞ்சன் கூறுகையில், "மங்கி பாக்ஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டு உள்ளது. இதில் கவலைப்பட எந்த காரணமும் இல்லை. மங்கி பாக்ஸ் பாதிப்பு வேகமாகப் பரவும் தன்மை கொண்டது இல்லை. ஆனால் கொரோனா வைரஸ் உடன் ஒப்பிடும்போது இது குழந்தைகளுக்கு ஆபத்தானது" என்றார்.

அறிகுறிகள்
மங்கி பாக்ஸ் அறிகுறிகள் குறித்துப் பேசிய அவர், "குரங்கு நோய் அறிகுறிகள் பெரியம்மை மற்றும் சின்னம்மை போலத்தான் இருக்கும். ஆரம்பத்தில், நோயாளிகளுக்குக் காய்ச்சல் மற்றும் சற்று வீக்கம் இருக்கும். 5 நாட்களுக்குப் பிறகு, அவர்கள் முகம், உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் கொப்புளங்கள் உருவாகும். மங்கி பாக்ஸ் தீவிரமானால் கார்னியாவில் தடிப்புகள் ஏற்பட்டு பார்வை இழப்பும் ஏற்படலாம்.

எப்படி முடியும்
குரங்கு அம்மை வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நெருங்கிய தொடர்பு மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் நீண்ட நேரம் நேருக்கு நேர் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ பரவுகிறது" என்றார். மங்கி பாக்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து வெளியேறும் நீர்த் துளிகள் மூலம் வைரஸ் பாதிப்பு பரவும். இருப்பினும், பெரும்பாலும் மங்கி பாக்ஸ் லேசான பாதிப்பையே ஏற்படுத்தும். 15 நாட்கள் தனிமையில் இருந்தால் நிலைமை சீராகிவிடும்.
Recommended Video

மங்கி பாக்ஸ் பாதிப்பு
மங்கி பாக்ஸ் பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை 60 நாடுகளில் 6,000க்கும் மேற்பட்டோருக்கு மங்கி பாக்ஸ் உறுதியாகி உள்ளது. அதேபோல 3 பேர் உயிரிழந்து உள்ளனர். மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டு உள்ள நாடுகளில் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில், இதைப் பொதுச்சுகாதார அவசரநிலையாக அறிவிப்பது குறித்தும் உலக சுகாதார அமைப்பு ஆலோசிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications