Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பேரழிவு நடந்திருக்கும்" மக்களை ஆபத்தில் தள்ளிய ஏர் இந்தியா! ஒரு மாதமாக மாபெரும் பாதுகாப்பு குறைபாடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இருக்கும் முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்றாக ஏர் இந்தியா இருக்கிறது. இருப்பினும் அந்நிறுவனம் வரிசையாகப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அப்படித் தான் இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் ஏர் இந்தியா சிக்கியுள்ளது. ஏர் இந்தியா விமானம் சுமார் ஒரு மாதம் மிக பெரிய பாதுகாப்பு குறைபாடு உடன் பறந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!

இந்தியாவில் இப்போது விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்தியாவில் விமானங்கள் இல்லை. இப்போது நமது நாட்டில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா மட்டுமே முக்கிய நிறுவனங்களாக உள்ளன. கூடுதலாகச் சில நிறுவனங்கள் இருந்தாலும் அவற்றின் மார்கெட் பெரியளவில் இல்லை.

Air India A320 Flew 8 Flights Without Valid Airworthiness Certificate in November Plane Ground

ஏர் இந்தியா

இப்போது சந்தையைப் பிடிப்பதில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் நடந்த விமான விபத்து ஏர் இந்தியா இமேஜ்ஜை கடுமையாகப் பாதித்துள்ளது. அதில் இருந்து மீண்டு வருவதற்குள் ஏர் இந்தியா வரிசையாகப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இப்போதும் ஏர் இந்தியா மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அதாவது ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏ320 விமானம் ஒன்று ஏஆர்சி எனப்படும் Airworthiness Review Certificate இல்லாமல் இயங்கியுள்ளது. இந்தியாவில் இயக்கப்படும் எல்லா விமானங்களுக்கும் இந்த ஏஆர்சி பெறப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், ஏர் இந்திய விமானம் அந்தச் சான்றிதழ் இல்லாமலேயே கடந்த நவம்பர் மாதம் முழுக்க இயக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குளறுபடி

வழக்கமான ஆய்வுப் பணிகளில் தான் இதை ஏர் இந்தியா கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அனைத்துப் பணியாளர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக ஏர் இந்தியா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சார்பிலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை வருந்தத்தக்கது எனக் குறிப்பிட்ட ஏர் இந்தியா, இது தொடர்பாக உடனடியாகச் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது

ARC என்பது ஒரு விமானத்தின் முதன்மை விமானத் தகுதிச் சான்றிதழ் ஆவணமாகும். பராமரிப்புப் பதிவுகள் தொடங்கி விமானப் பாதுகாப்பு வரை எல்லாவற்றையும் இதில் விரிவாக ஆய்வு செய்வார்கள். ஏர் இந்தியாவின் ஒரு ஏர்பஸ் A320 விமானம் மட்டும் இந்தச் சான்றிதழ் இல்லாமலேயே பலமுறை இயங்கியது.

கடந்தாண்டு தான் ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா முழுமையாக இணைக்கப்பட்டது. அதன்படி விஸ்தாராவின் 70 விமானங்களுக்கான முதல் ஏஆர்சியை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வழங்கும் என முடிவு செய்யப்பட்டது. அதில் 69 விமானங்களுக்கான ARC எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. மிஸ்ஸான ஒரு விமானம் தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ஆய்வுகள்

அதாவது அந்த 70வது விமானம் இன்ஜின் மாற்றத்திற்காகத் தரையிறக்கப்பட்டது. சரியாக அந்த நேரத்தில் ARC காலாவதியானது. இருப்பினும், அதை கவனிக்காமல் ஊழியர்கள் இஞ்சினை மாற்றி, விமானத்தை வழக்கமான சேவைக்கு அனுப்பியுள்ளனர். இதுவே அங்குப் பிரச்சினையாக மாறியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட விமானம் உடனடியாகத் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்திற்கு ARC செயல்முறை இப்போது நடந்து வருகிறது. இந்த விசாரணை முடியும் வரை ஏர் இந்தியா சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களையும் இடைநீக்கம் செய்துள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா விசாரணையை ஆரம்பித்துள்ள நிலையில், தவறு செய்த ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏர் இந்தியா கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+