திடீரென விமானத்தை ரத்து செய்த ஏர் இந்தியா.. தீபாவளிக்கு வர இருந்த பயணிகள் பரிதவிப்பு! என்ன நடந்தது?
டெல்லி: தீபாவளி வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களும் நாடு திரும்பி வருகிறார்கள். அந்த வகையில் இத்தாலியின் மிலன் நகரில் இருந்து டெல்லிக்கு வர ஏர் இந்தியா விமானத்தில் புக் செய்த பயணிகளுக்கு கடைசி நேரத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஏர் இந்தியாவின் அறிவிப்பு அமைந்துள்ளது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்தானதால் பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தியாவில் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி (திங்கள் கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்
இதனால், கடந்த இரு தினங்களாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று இருக்கிறார்கள். இதனால், கடந்த வியாழக்கிழமை முதலே பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த இரு தினங்களாக சென்னை - திருச்சி சாலையில் சாரை சாரையாக வாகனங்கள் அணி வகுத்து செல்கின்றன.
இதனால் டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படும் அளவிற்கு சூழல் உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிநாடுகளில் கல்வி, வேலை வாய்ப்பு என பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும் இந்தியர்களும் நாடு திரும்பி வருவதை பார்க்க முடிகிறது.
ஏர் இந்தியா விமானம் ரத்து
அந்த வகையில், இத்தாலியின் மிலன் நகரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானத்தில், இந்தியா திரும்ப நூற்றுக்கணக்கான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் காலை வாரியிருக்கிறது ஏர் இந்தியா.
அதாவது, மிலனில் இருந்து டெல்லி செல்லவிருந்த ஏர் இந்தியா AI138 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. "அக்டோபர் 17, 2025 அன்று மிலனில் இருந்து டெல்லிக்குச் செல்லவிருந்த AI138 விமானம், பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பத் தேவை காரணமாக ரத்து செய்யப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிதவித்த பயணிகள்
புக்கிங் செய்த பயணிகள் அனைவருக்கும் ஹோட்டல் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு விமான நிலையத்திற்கு சற்று வெளியே ஹோட்டல்கள் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்ததாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு அக்டோபர் 20, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு, ஏர் இந்தியா மற்றும் பிற விமான நிறுவனங்களில் இருக்கைகள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தீபாவளி பண்டிகை 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள சூழலில் விமானம் ரத்து செய்யப்பட்டு மாற்று விமானமும் உடனடியாக இல்லாத நிலையால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சிரமங்களுக்கு வருந்துகிறோம்
பாதிக்கப்பட்ட அனைத்துப் பயணிகளுக்கும் உணவு உட்பட அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. "பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் வருந்துகிறோம், மேலும் எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்" என்று ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications