விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி சேதம்.. தரவுகள் மீட்பதில் சிக்கல்? அடுத்து என்ன நடக்கும்
டெல்லி: அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டேக் ஆஃப் ஆகும் போது மேலே எழ முடியாமல் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியாத நிலையில், கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் கருப்பு பெட்டியும் சேதமடைந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் தரவுகளை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது. விமான நிலையத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிஜே மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடம் மீது ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.

அகமதாபாத் விமான விபத்து
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் பலியாகினர். ஒரே ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஏனைய அனைத்து பயணிகளும் பலியாகினர். கீழே விழுந்த இடத்தில் இருந்த கல்லூரி விடுதியில் இருந்த 29 பேர் என மொத்தம் 270 பேர் பலியானார்கள். அவர்களின் உடல்கள் தீயில் கருகியும், சிதைந்தும் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தன. எனவே, டிஎன்ஏ சோதனை மூலம் உடல்களை அடையாளம் காண முடிவு செய்யப்பட்டு அடையாளம் கண்டறியப்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போயிங் ட்ரீம்லைனர் ரக விமானமான ஏர் இந்தியா விமானம், எப்படி விபத்தில் சிக்கியது என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை. பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டறிந்தால் மட்டுமே விபத்துகான காரணம் தெரியவரும் என்பதால் விபத்து நடைபெற்ற பகுதியில் கருப்பு பெட்டியை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.
கருப்பு பெட்டி சேதம்
கடந்த திங்கள் கிழமை கருப்பு பெட்டி கண்டறியப்பட்டது. இந்த கருப்பு பெட்டியில் இரண்டு வகையான கருவிகள் இருக்கும். சிவிஆர் எனப்படும் காக்பிட் குரல் பதிவு மற்றும் விமானத்தின் டேட்டா பதிவுகள் இருக்கும். கருப்பு பெட்டியில் விமானத்தின் கடைசி நொடி பதிவுகள் இடம் பெற்று இருக்கும் என்பதால் விமான விபத்து எதனால் ஏற்பட்டு இருக்கும்? என்பதை கண்டறிய முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், கருப்பு பெட்டி சேதம் அடைந்து இருப்பதால் அதில் உள்ள தரவுகளை மீட்க அமெரிக்காவுக்கு இந்த கருவி அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாஷிங்டன் டிசியில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திற்கு கருப்பு பெட்டி அனுப்பப்படும் என்றும் எனினும், இது தொடர்பான இறுதி முடிவை அரசே எடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
25 மணி நேரம் வரையிலான குரல் பதிவு
கருப்பு பெட்டியில் உள்ள குரல் பதிவு கருவில், விமானிகளின் 25 மணி நேரம் வரையிலான குரல் பதிவு இடம் பெற்று இருக்கும். அது போக, விமான கட்டுப்பாட்டு அறையுடனான அழைப்பு, சத்தம், தானியங்கி அலர்ட் ஆகியவை இருக்கும். புதிய ரக விமானங்களில் இவை உள்ளன. எனினும், ஏஐ 171 விமானம் 2014 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டுக்கு பிறகான விமானங்களில் 25 மணி நேரம் வரையிலான குரல் பதிவு பதிவாகும் வகையில் சிஸ்டம் உள்ளது.
ஆனால், விபத்துக்குள்ளான விமானத்தில் 2 மணி நேரம் வரையிலான பதிவு மட்டுமே இருக்கும். விமானத்தின் தரவு பதிவுகள் (FDR) பொறுத்தவரை, விமானம் பறக்கும் உயரம், வேகம், உந்து வேகம் உள்ளிட்டவை இடம் பெற்று இருக்கும். நவீன ஜெட்களில் 787-8 ஆகியவற்றில் 25 மணி நேரம் வரையிலான தரவுகள் இடம் பெற்று இருக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications