புதிதாக 250 விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா.. 'ஏர் பஸ்' நிறுவனத்துடன் ஒப்பந்தம்.. பிரதமர் பெருமிதம்!
ஏர் இந்தியாவை வாங்கியது முதலாகவே அதன் சேவை தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் டாடா குழுமம் ஈடுபட்டு வருகிறது. மேலும், பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கேற்ப விமானங்களின் எண்ணிக்கையையும் உயர்த்த உள்ளது.
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'ஏர் பஸ்' (AirBus) என்ற விமானக் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து புதிதாக 250 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்குவதற்காகவும், சர்வதேச அளவிலான விமானப் போக்குவரத்தில் பிரத்யேக இடம் பிடிப்பதற்காகவும் இந்த நடவடிக்கையில் ஏர் இந்தியா நிறுவனம் இறங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா - பிரான்ஸ் இடையேயான உறவின் ஆழத்தை இது பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.

டாடா வசம் சென்ற 'ஏர் இந்தியா'
மத்திய அரசின் வசம் இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்ததை தொடர்ந்து, அதனை விற்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டாடா குழுமம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. ஏற்கனவே டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியாவை மத்திய அரசு தன்வசப்படுத்தியது. தற்போது மீண்டும் அந்நிறுவனத்தை டாடா குழுமம் கையில் எடுத்திருக்கிறது.

250 புதிய விமானங்கள்
ஏர் இந்தியாவை வாங்கியது முதலாகவே அதன் சேவை தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் டாடா குழுமம் ஈடுபட்டு வருகிறது. மேலும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கேற்ப விமானங்களின் எண்ணிக்கையையும் உயர்த்த ஏர் இந்தியா திட்டமிட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகவே, தற்போது 250 புதிய விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ஏர் இந்தியா மேற்கொண்டுள்ளது.

முறைப்படி அறிவிப்பு
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'ஏர் பஸ்' நிறுவனத்திடம் இருந்து இந்த விமானங்களை வாங்க ஏர் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த 250 விமானங்களில் 40 விமானங்கள் அகலமான உடலமைப்பை கொண்டவை ஆகும். இதற்கான ஒப்பந்தம் கடந்த மாதம் 27-ம் தேதியே கையெழுத்தாகிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இதனை டாடா குழுமங்களின் தலைவர் என்.சந்திரசேகரன் இன்று முறைப்படி அறிவித்தார்.

மோடி பெருமிதம்
பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மேக்ரான் உடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாக இன்று ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வின் போதே, மேற்குறிப்பிட்ட இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை டாடா குழுங்களின் தலைவர் சந்திரசேகர் வெளியிட்டார். அப்போது மோடி பேசுகையில், "இந்தியா - பிரான்ஸ் இடையேயான உறவு மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்று. தற்போது ஏர் இந்தியா - ஏர் பஸ் இடையே ஏற்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தமானது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் ஆழத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான விவகாரங்களில் இந்தியாவும், பிரான்ஸும் பெரும் பங்களிப்புகளை அளித்து வருகிறது" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications