ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சி. கார்த்தியை கைது செய்ய மார்ச் 8 வரை தடை நீட்டிப்பு
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்வதற்கு இடைக்கால தடையை மார்ச் 8ம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் 2006ம் ஆண்டு பதவியில் இருந்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் என்ற நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்தது. அதில் அமைச்சரவை குழுவில் அனுமதி பெறாமல் முதலீடு செய்தது மட்டுமின்றி பல கோடி ரூபாய் மோசடியும் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்துக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. அதனையடுத்து, சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்க பிரிவினர் தனித்தனியாக வழக்கு தொடர அந்த விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கிற்கு இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இருந்தும் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை மார்ச் 8ம் தேதிவரை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications